வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் மாபெரும் பட்டத்திருவிழா!

81

யாழ்ப்பாணம், வடமராட்சி – கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மாபெரும் பட்டத்திருவிழா இன்று மாலை தொடங்கி சிறப்புற நடைபெற்று வருகிறது.

முப்பரிமாண பட்டங்களை போட்டியாளர்கள் பங்கேற்க செய்யும் வகையில் ஏற்பாட்டாளர்களால் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பெருமளவான பட்டங்கள் அங்கு பறக்கவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் பல பட்டங்கள் வல்வெட்டித்துறையில் நடைபெறும் பட்டத்திருவிழாவில் பங்கேற்கும் போட்டியாளர்களால் கட்டப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

வல்வெட்டித்துறையில் தைப்பொங்கல் நாளில் நடைபெறும் பட்டத்திருவிழா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்படுவதாக பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும், அங்கு பறக்கவிடுவதற்காக கட்டப்பட்ட பல பட்டங்கள் வடமராட்சி கிழக்கில் பறக்கவிடப்பட்டு வருகின்றன.

தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்