• May 12 2024

கிழக்கில் பெரும் சோகம்..! கோரவிபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Nov 18th 2023, 6:59 am
image

Advertisement

மோட்டார் சைக்கிள்- பஸ் வண்டி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் நேற்று(17) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் 23 வயது  இளைஞர்  ஸ்தலத்தில் உயிரிழந்தார்.

பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞனான 19 வயது மதிக்கத்தக்கவர்  சிகிச்சை பலனின்றி   உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்  ஒன்றுமே விபத்துக்குள்ளானது.

மேற்படி உயிரிழந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த நிலையில் விபத்திற்கு உள்ளாகி உள்ளதுடன் விபத்தில் இறந்த இவ்விருவரும்  கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


கிழக்கில் பெரும் சோகம். கோரவிபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia மோட்டார் சைக்கிள்- பஸ் வண்டி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் நேற்று(17) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் 23 வயது  இளைஞர்  ஸ்தலத்தில் உயிரிழந்தார்.பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞனான 19 வயது மதிக்கத்தக்கவர்  சிகிச்சை பலனின்றி   உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்  ஒன்றுமே விபத்துக்குள்ளானது.மேற்படி உயிரிழந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த நிலையில் விபத்திற்கு உள்ளாகி உள்ளதுடன் விபத்தில் இறந்த இவ்விருவரும்  கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement