திருகோணமலையில் அமைந்துள்ள பாட்டாளிபுரத்தில் நிலக்கடலைக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைக்காததால் மிகவும் கஷ்ட நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த பிரதேசத்தில் வாழும் நிலக்கடலை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை நிலக்கடலை விவசாயமானது 150 ஏக்கருக்கு மேலே செய்யப்பட்ட நிலையில் நிலக்கடலையில் உள்ள விதை ஒரு கிலோ 700 ரூபா 800 ரூபாவுக்கு வாங்கி நடுவதாகவும் தெரிவித்துள்ள விவசாயிகள், இதனை அறுபடை செய்கின்ற பொழுது ஒரு கிலோ நூறு ரூபாய்க்கும் 120 ரூபாய்க்கும் கேட்கிறார்கள். தற்பொழுது கூட சில வியாபாரிகள் 80 ரூபாய்க்கு கூட நிலக்கடலையினை கேட்கிறார்கள்.
ஆகவே நிலக்கடலையினை தமக்கு சாதகமான விலைக்கு விற்கமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதனால் தமக்குரிய வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விவசாயம் செய்யும் கூலிகள் (கலப்புக்க்கூலிகளாக இருக்கலாம் அல்லது பாதுகாப்புக் கூலிகளாக இருக்கலாம்). மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நிலக்கடலை வியாபாரம் பெரிதும் பாதிப்பு - வறுமையில் வாடும் பாட்டாளிபுர மக்கள்.samugammedia திருகோணமலையில் அமைந்துள்ள பாட்டாளிபுரத்தில் நிலக்கடலைக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைக்காததால் மிகவும் கஷ்ட நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த பிரதேசத்தில் வாழும் நிலக்கடலை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இம்முறை நிலக்கடலை விவசாயமானது 150 ஏக்கருக்கு மேலே செய்யப்பட்ட நிலையில் நிலக்கடலையில் உள்ள விதை ஒரு கிலோ 700 ரூபா 800 ரூபாவுக்கு வாங்கி நடுவதாகவும் தெரிவித்துள்ள விவசாயிகள், இதனை அறுபடை செய்கின்ற பொழுது ஒரு கிலோ நூறு ரூபாய்க்கும் 120 ரூபாய்க்கும் கேட்கிறார்கள். தற்பொழுது கூட சில வியாபாரிகள் 80 ரூபாய்க்கு கூட நிலக்கடலையினை கேட்கிறார்கள்.ஆகவே நிலக்கடலையினை தமக்கு சாதகமான விலைக்கு விற்கமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதனால் தமக்குரிய வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் விவசாயம் செய்யும் கூலிகள் (கலப்புக்க்கூலிகளாக இருக்கலாம் அல்லது பாதுகாப்புக் கூலிகளாக இருக்கலாம்). மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.