கடந்த 09 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் இலங்கை கடற்படையினர் மூவரும், இந்திய மீனவர்கள் மூவரும் காயமடைந்துள்ளனர்.
குறித்த மீனவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை முரண்பாடு தோன்றியதால் இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் இந்திய மீனவர் ஒருவருக்கு தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதுடன் உடலிலும் அடி காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் மற்றைய இரண்டும் மீனவர்களுக்கும் தொடை, முதுகு பகுதிகளில் அடி காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் காயமடைந்த மீனவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
யாழ். கடற்பகுதியில் இந்திய மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையே முறுகல்; அறுவர் காயம் கடந்த 09 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் இலங்கை கடற்படையினர் மூவரும், இந்திய மீனவர்கள் மூவரும் காயமடைந்துள்ளனர்.குறித்த மீனவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை முரண்பாடு தோன்றியதால் இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதில் இந்திய மீனவர் ஒருவருக்கு தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதுடன் உடலிலும் அடி காயங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் மற்றைய இரண்டும் மீனவர்களுக்கும் தொடை, முதுகு பகுதிகளில் அடி காயங்கள் ஏற்பட்டுள்ளன.இவ்வாறு கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.இந்நிலையில் காயமடைந்த மீனவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.