• Nov 26 2024

யாழ். தேவி ரயில் பாதை சேவை மீள ஆரம்பிக்கப்படும் – நாமல் உறுதி

Chithra / Aug 29th 2024, 8:08 am
image

 

நாட்டின் பொது மக்களை புறக்கணிக்காமல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அரசியல் முடிவை நாங்கள் ஒருபோதும் எடுக்கவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் அபிவிருத்தியை நிறுத்திய இடத்தில் இருந்து எவ்வாறு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதே எனது பொறுப்பும் சவாலும் என நான் கருதுகின்றேன்.

தற்போதைய அரசாங்கம் வரம்பற்ற மற்றும் நியாயமற்ற வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது.

இந்த நாட்டு மக்களுக்கு தாங்கிக்கொள்ளக்கூடிய வரிக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம். கிராம பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன், வரிய மனிதருக்கான பொருளாதாரத்தை உருவாக்குவோம்.

30 வருடகால யுத்தத்தை முடித்துக் கொண்டு எமது அரசாங்கம் வடமாகாணத்திற்கான யாழ் தேவி ரயில் பாதைகளை வெற்றிகரமாக நிறுவியது. 

எனினும் தற்போதைய நிர்வாகத்தின் செயற்திறன் இன்மையினால் இந்த சேவைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக நாமல் தெரிவித்தார்.

மாத்தறை முதல் கதிர்காமம் வரையிலான 114 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதையை தாமதமின்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். " என்றார்.

யாழ். தேவி ரயில் பாதை சேவை மீள ஆரம்பிக்கப்படும் – நாமல் உறுதி  நாட்டின் பொது மக்களை புறக்கணிக்காமல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அரசியல் முடிவை நாங்கள் ஒருபோதும் எடுக்கவில்லை.மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் அபிவிருத்தியை நிறுத்திய இடத்தில் இருந்து எவ்வாறு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதே எனது பொறுப்பும் சவாலும் என நான் கருதுகின்றேன்.தற்போதைய அரசாங்கம் வரம்பற்ற மற்றும் நியாயமற்ற வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது.இந்த நாட்டு மக்களுக்கு தாங்கிக்கொள்ளக்கூடிய வரிக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம்.இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம். கிராம பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன், வரிய மனிதருக்கான பொருளாதாரத்தை உருவாக்குவோம்.30 வருடகால யுத்தத்தை முடித்துக் கொண்டு எமது அரசாங்கம் வடமாகாணத்திற்கான யாழ் தேவி ரயில் பாதைகளை வெற்றிகரமாக நிறுவியது. எனினும் தற்போதைய நிர்வாகத்தின் செயற்திறன் இன்மையினால் இந்த சேவைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக நாமல் தெரிவித்தார்.மாத்தறை முதல் கதிர்காமம் வரையிலான 114 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதையை தாமதமின்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். " என்றார்.

Advertisement

Advertisement

Advertisement