• Sep 17 2024

யாழ். இளைஞனுக்கு கிடைத்த வாய்ப்பு! விரைவில் இந்தியா பயணம் SamugamMedia

Chithra / Mar 20th 2023, 6:19 pm
image

Advertisement

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாஸ்காந் தற்போது இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் றோயல் அணியில் நெற் பந்து வீச்சாளராக வாய்ப்பு பெற்றுள்ள வியாஷ்காந் இன்னும் சில தினங்களில் இந்தியா செல்லவுள்ளார்.

உள்ளூர் மட்டத்தினை சேர்ந்த இளம் கிரிக்கட் வீரர்களை தேசிய மற்றும்  மட்டத்திற்கு உள்வாங்குதல் குறித்து ஜப்னா ஸ்டாலியன்ஸ் கிரிக்கட் அக்கடமி சார்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 

இதன்போது கருத்து தெரிவித்த ஜப்னா ஸ்டாலியன்ஸ் கிரிக்கட் அக்கடமியின் செயலாளர் திரு.ஸ்ரீதரன், 


தரமான கிரிக்கட் வீரர்களை உருவாக்குதல் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவது குறித்து தாம் கவனம் செலுத்தி வருவதாகவும், குறித்த நோக்கத்திற்காக யாழ்ப்பாணம் பரி.யோவான் கிரிக்கட் மைதானத்துக்கு முன்பாக ஓர் உள்ளக விளையாட்டு மைதானம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் அதற்கான வேலைகள் யாவும் நிறைவடையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் இலங்கை கிரிக்கட்டில் வளர்ந்துவரும் இளம் வீரரான யாழ்ப்பாணத்து சேர்ந்த வியாஸ்காந்த் ராஜஸ்தான் ராயல் கழகம் சார்பாக ஐபிஎல் போட்டியில், வலைப்பந்து வீச்சாளராக களமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 


யாழ். இளைஞனுக்கு கிடைத்த வாய்ப்பு விரைவில் இந்தியா பயணம் SamugamMedia இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாஸ்காந் தற்போது இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தான் றோயல் அணியில் நெற் பந்து வீச்சாளராக வாய்ப்பு பெற்றுள்ள வியாஷ்காந் இன்னும் சில தினங்களில் இந்தியா செல்லவுள்ளார்.உள்ளூர் மட்டத்தினை சேர்ந்த இளம் கிரிக்கட் வீரர்களை தேசிய மற்றும்  மட்டத்திற்கு உள்வாங்குதல் குறித்து ஜப்னா ஸ்டாலியன்ஸ் கிரிக்கட் அக்கடமி சார்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த ஜப்னா ஸ்டாலியன்ஸ் கிரிக்கட் அக்கடமியின் செயலாளர் திரு.ஸ்ரீதரன், தரமான கிரிக்கட் வீரர்களை உருவாக்குதல் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவது குறித்து தாம் கவனம் செலுத்தி வருவதாகவும், குறித்த நோக்கத்திற்காக யாழ்ப்பாணம் பரி.யோவான் கிரிக்கட் மைதானத்துக்கு முன்பாக ஓர் உள்ளக விளையாட்டு மைதானம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் அதற்கான வேலைகள் யாவும் நிறைவடையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.மேலும் இலங்கை கிரிக்கட்டில் வளர்ந்துவரும் இளம் வீரரான யாழ்ப்பாணத்து சேர்ந்த வியாஸ்காந்த் ராஜஸ்தான் ராயல் கழகம் சார்பாக ஐபிஎல் போட்டியில், வலைப்பந்து வீச்சாளராக களமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement