• May 10 2024

நாளை முடங்கவுள்ள சுகாதார சேவைகள்..! தொழிற்சங்கங்களின் அதிரடி அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 7th 2023, 10:08 am
image

Advertisement

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை (08) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

சுகாதார சேவையில் 15 சதவீத சம்பள வெட்டு மற்றும் சேவையை பேணுவதற்கு தேவையான மருந்துகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை இரத்து செய்ய வேண்டும் என்பது இவர்களது ஐந்து கோரிக்கைகளில் உள்ளடங்கும்.

இந்தக் கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு பதிலளிக்காவிட்டால் நாளை (08) காலை 8 மணி முதல் 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சுகாதார சேவை சங்கங்களும் இணைந்து கையொப்பமிட்டு நேற்று (06) சுகாதார செயலாளருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது

நாளை முடங்கவுள்ள சுகாதார சேவைகள். தொழிற்சங்கங்களின் அதிரடி அறிவிப்பு SamugamMedia ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை (08) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.சுகாதார சேவையில் 15 சதவீத சம்பள வெட்டு மற்றும் சேவையை பேணுவதற்கு தேவையான மருந்துகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை இரத்து செய்ய வேண்டும் என்பது இவர்களது ஐந்து கோரிக்கைகளில் உள்ளடங்கும்.இந்தக் கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு பதிலளிக்காவிட்டால் நாளை (08) காலை 8 மணி முதல் 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சுகாதார சேவை சங்கங்களும் இணைந்து கையொப்பமிட்டு நேற்று (06) சுகாதார செயலாளருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement