• Sep 21 2024

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்! samugammedia

Tamil nila / Jul 30th 2023, 11:14 am
image

Advertisement

கண்களுக்கான 100,000  லென்ஸ்கள் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையில் முறைகேடு இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் ஜி.ஜி.சமல் சஞ்சீவ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக எதிர்வரும் 3 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தெரிவித்துள்ளது.

குறித்த சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என அதன் தலைவர்  ரவி குமுதேஷ் கூறுகிறார்.

அத்துடன் இந்நாட்டின் சுகாதார சேவை தொடர்பில் சுகாதார நிபுணர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து சுகாதார சேவை தொடர்பிலான வௌிப்படுத்தல் விசேட மாநாடு எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக  ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.


பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள் samugammedia கண்களுக்கான 100,000  லென்ஸ்கள் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையில் முறைகேடு இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் ஜி.ஜி.சமல் சஞ்சீவ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.இதேவேளை, சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக எதிர்வரும் 3 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தெரிவித்துள்ளது.குறித்த சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என அதன் தலைவர்  ரவி குமுதேஷ் கூறுகிறார்.அத்துடன் இந்நாட்டின் சுகாதார சேவை தொடர்பில் சுகாதார நிபுணர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து சுகாதார சேவை தொடர்பிலான வௌிப்படுத்தல் விசேட மாநாடு எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக  ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement