• Oct 18 2024

வடக்கு கிழக்கிலும் ஹெலிகொப்டர் - முழு நாட்டிலும் வெற்றி! மைத்திரி நம்பிக்கை

Chithra / Jan 12th 2023, 3:25 pm
image

Advertisement

புதிதாக உதயமாகியுள்ள சுதந்திர மக்கள் கூட்டணியால் நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் சபை, உத்தர லங்கா கூட்டமைப்பு உள்ளிட்ட 13 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. புதிய கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் சின்னம் ஹெலிகொப்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'சுதந்திர மக்கள் கூட்டணி' உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை பதிவு செய்யும் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டணியால் நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் எதிர்காலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலேயே நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

சிறந்த ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு நாட்டில் ஜனநாயகம் என்பது அடிப்படை அத்தியாவசிய தேவையாகும். இந்த கூட்டணியை ஸ்தாபிப்பதற்காக கடந்த ஓரிரு வாரங்களாக கடுமையாக பாடுபட்டோம்.

உள்ளுராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டே நாம் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். அதற்கமைய மக்களின் முழுமையான ஆதரவுடன் நாம் முழு நாட்டிலும் வெற்றி பெறுவோம்.

90 சதவீத வெற்றியை எம்மால் பதிவு செய்ய முடியும். வடக்கு, கிழக்கில் நாம் போட்டியிடுவோம்.

இந்த கூட்டணியால் நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கிலும் ஹெலிகொப்டர் - முழு நாட்டிலும் வெற்றி மைத்திரி நம்பிக்கை புதிதாக உதயமாகியுள்ள சுதந்திர மக்கள் கூட்டணியால் நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் சபை, உத்தர லங்கா கூட்டமைப்பு உள்ளிட்ட 13 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. புதிய கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் சின்னம் ஹெலிகொப்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'சுதந்திர மக்கள் கூட்டணி' உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை பதிவு செய்யும் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.இந்தக் கூட்டணியால் நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.மேலும் நாட்டின் எதிர்காலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலேயே நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.சிறந்த ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு நாட்டில் ஜனநாயகம் என்பது அடிப்படை அத்தியாவசிய தேவையாகும். இந்த கூட்டணியை ஸ்தாபிப்பதற்காக கடந்த ஓரிரு வாரங்களாக கடுமையாக பாடுபட்டோம்.உள்ளுராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டே நாம் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். அதற்கமைய மக்களின் முழுமையான ஆதரவுடன் நாம் முழு நாட்டிலும் வெற்றி பெறுவோம்.90 சதவீத வெற்றியை எம்மால் பதிவு செய்ய முடியும். வடக்கு, கிழக்கில் நாம் போட்டியிடுவோம்.இந்த கூட்டணியால் நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement