• Nov 14 2024

தனியார் துறையினருக்கான விடுமுறை விபரம் அறிவிப்பு!

Chithra / Sep 19th 2024, 3:44 pm
image



2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய தேர்தல்கள் ஆணைக்குழு, அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கும் கீழ்க்கண்டவாறு தூரத்திற்கு ஏற்ப விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

– 40 கி.மீ. அல்லது அதற்கு குறைவாக இருந்தால் அரை நாள் விடுமுறை

– 40 – 100 கிமீ வரை இருந்தால் ஒரு நாள் விடுமுறை

– 100 – 150 கி.மீ தூரம் என்றால் ஒன்றரை நாள் விடுமுறை

– 150 கி.மீ.க்கு மேல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறை

மேலும், பணியிடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள சில வாக்காளர்களுக்கு வாக்களிக்க மூன்று நாட்கள் தேவைப்பட்டால் அதற்குத் தேவையான மூன்று நாள் விடுமுறையையும் அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.

அத்தோடு, பல்கலைக்கழகங்களின் பணியாட் குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்து.

தனியார் துறையினருக்கான விடுமுறை விபரம் அறிவிப்பு 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய தேர்தல்கள் ஆணைக்குழு, அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.தனியார் துறை ஊழியர்களுக்கும் கீழ்க்கண்டவாறு தூரத்திற்கு ஏற்ப விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.– 40 கி.மீ. அல்லது அதற்கு குறைவாக இருந்தால் அரை நாள் விடுமுறை– 40 – 100 கிமீ வரை இருந்தால் ஒரு நாள் விடுமுறை– 100 – 150 கி.மீ தூரம் என்றால் ஒன்றரை நாள் விடுமுறை– 150 கி.மீ.க்கு மேல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறைமேலும், பணியிடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள சில வாக்காளர்களுக்கு வாக்களிக்க மூன்று நாட்கள் தேவைப்பட்டால் அதற்குத் தேவையான மூன்று நாள் விடுமுறையையும் அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.அத்தோடு, பல்கலைக்கழகங்களின் பணியாட் குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இது குறித்து  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்து.

Advertisement

Advertisement

Advertisement