• May 18 2024

நீதித்துறையையே கைவிட்ட அரசு எப்படித் தீர்வைத் தரும்? - அநுர கேள்வி samugammedia

Chithra / Oct 10th 2023, 12:49 pm
image

Advertisement


"நீதிபதியை வெளியேற்றி நீதித்துறை சமூகத்தை வீதியில் விட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசு, இன, மதப் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வை வழங்கும்? இந்த அரசை இனியும் நம்புபவர்கள் படுமுட்டாள்களாவர்."

- இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 'இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளேன்' - என்று குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சர்வதேச சமூகத்தை மாத்திரமல்ல இங்குள்ள அரசியல்வாதிகளையும், மக்களையும் ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்று ஜனாதிபதி தலைமையிலான அரசு கனவு காண்கின்றது. தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அரசின் கனவு தவிடுபொடியாகி விடும்.

இங்குள்ள சில அரசியல்வாதிகள் கோமா நிலையில் இருந்தாலும் நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள்.

வடக்கு, கிழக்கு சென்று ஒன்றையும், தெற்கில் இன்னொன்றையும், வெளிநாடு சென்று மற்றொன்றையும் மாறி மாறி சொல்லித் திரியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பகிரங்கமாக ஒரு சவாலை விடுகின்றோம். அதாவது முடிந்தால் தேசிய ரீதியில் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள்." - என்றார்.

நீதித்துறையையே கைவிட்ட அரசு எப்படித் தீர்வைத் தரும் - அநுர கேள்வி samugammedia "நீதிபதியை வெளியேற்றி நீதித்துறை சமூகத்தை வீதியில் விட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசு, இன, மதப் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வை வழங்கும் இந்த அரசை இனியும் நம்புபவர்கள் படுமுட்டாள்களாவர்."- இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.மட்டக்களப்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 'இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளேன்' - என்று குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"சர்வதேச சமூகத்தை மாத்திரமல்ல இங்குள்ள அரசியல்வாதிகளையும், மக்களையும் ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்று ஜனாதிபதி தலைமையிலான அரசு கனவு காண்கின்றது. தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அரசின் கனவு தவிடுபொடியாகி விடும்.இங்குள்ள சில அரசியல்வாதிகள் கோமா நிலையில் இருந்தாலும் நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள்.வடக்கு, கிழக்கு சென்று ஒன்றையும், தெற்கில் இன்னொன்றையும், வெளிநாடு சென்று மற்றொன்றையும் மாறி மாறி சொல்லித் திரியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பகிரங்கமாக ஒரு சவாலை விடுகின்றோம். அதாவது முடிந்தால் தேசிய ரீதியில் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement