• May 13 2024

சிறையில் பரவும் நோய் 8 மாத குழந்தைக்கு தொற்றியது எப்படி? – குழப்பத்தில் சுகாதார அதிகாரிகள் samugammedia

Chithra / Aug 30th 2023, 9:01 am
image

Advertisement

மெனின்கோகோல் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கருதப்படும் 8 மாத குழந்தைக்கும்  காலி சிறையில் அந்த நோயால் உயிரிழந்த கைதிகள் இருவருக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் உயிரிழப்பின் பின்னர் பக்டிரீயா சமூகத்திற்குள் பரவியுள்ளதா என்ற கவலை உருவாகியுள்ளது.

குழந்தை கராப்பிட்டிய மருத்துவமனையில் மெனின்கோகோல் நோய் பாதிப்பு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

மாதிரிகள் இன்னமும் ஆராயப்பட்டு வருவதால் மரணத்திற்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.

எனினும் அந்த குழந்தைக்கும் காலிச்சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை  என பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் கொனரா சோமரட்ண தெரிவித்துள்ளார்.

கைதிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் குழந்தையின் குடும்பத்தவர்களுக்கும் உயிரிழந்த கைதிகளுக்கும் எந்த தொடர்புமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து அன்டிபயோட்டிக் ஊசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் எவராவது நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறையில் பரவும் நோய் 8 மாத குழந்தைக்கு தொற்றியது எப்படி – குழப்பத்தில் சுகாதார அதிகாரிகள் samugammedia மெனின்கோகோல் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கருதப்படும் 8 மாத குழந்தைக்கும்  காலி சிறையில் அந்த நோயால் உயிரிழந்த கைதிகள் இருவருக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் உயிரிழப்பின் பின்னர் பக்டிரீயா சமூகத்திற்குள் பரவியுள்ளதா என்ற கவலை உருவாகியுள்ளது.குழந்தை கராப்பிட்டிய மருத்துவமனையில் மெனின்கோகோல் நோய் பாதிப்பு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.மாதிரிகள் இன்னமும் ஆராயப்பட்டு வருவதால் மரணத்திற்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.எனினும் அந்த குழந்தைக்கும் காலிச்சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை  என பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் கொனரா சோமரட்ண தெரிவித்துள்ளார்.கைதிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் குழந்தையின் குடும்பத்தவர்களுக்கும் உயிரிழந்த கைதிகளுக்கும் எந்த தொடர்புமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.குழந்தையுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து அன்டிபயோட்டிக் ஊசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் எவராவது நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement