• Aug 19 2025

வடக்கில் கிழக்கில் ஹர்த்தால் எப்படி? உண்மை நிலவரம் இதோ!

Chithra / Aug 18th 2025, 12:55 pm
image


வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளதுடன், சில பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 


யாழ்ப்பாணம்

அதன்படி யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளன. 

அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன், அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகிறது. 

மேலும், திருநெல்வேலி சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் சில பகுதிகளில் வியாபாரா நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மேலும் சாவகச்சேரி நகரில் மரக்கறி சந்தை மற்றும் அதனுடன் இணைந்த கடைத்தொகுதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் ஏனைய தேங்காய் சந்தை, பழக்கடை, மீன் சந்தை தொகுதிகள் பகுதியளவில் இயங்குவதுடன் ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறந்திருப்பதுடன் அரச, தனியார் பொதுப் போக்குவரத்தும் சீராக இயங்குகின்றது.

அத்தோடுஇன்றைய தினம் பருத்தித்துறை மந்திகை நகர்களில் சுமார் 90 வீதமான கடைகள் திறந்துள்ளன. போக்குவரத்து சேவைகளும்  வழமைபோன்று இடம் பெற்றுவருகின்றது.

மந்திகை சந்தையும் வழமைபோன்று இயங்கிவருகிறது. பருத்தித்துறை சந்தைகளும் வழமைபோன்று இயங்கிவருகிறன.


வவுனியா


வவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநிலையில் உள்ளதுடன் சில செயற்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை கர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், அவர்களது மொத்த வியாபார சந்தைக்கடைத்தொகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது. 

இதேவேளை பழையபேருந்து நிலையம் மற்றும் பசார்வீதியில் உள்ள இஸ்லாமிய வியாபாரநிலையங்களில் குறிபிட்ட அளவிலான வர்த்தக நிலையங்கள் மட்டும் திறந்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது. 

இதேவேளை புறநகரப்பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம்,நெடுங்கேணி,கனகராயன்குளம்,புளியங்குளம் பகுதிகளில் அநேகமான வர்த்தக நிலையங்கள் திறந்திருந்ததுடன், சில வர்த்தக நிலையங்கள் கர்த்தாலுக்கு ஆதரவினை தெரிவித்து பூட்டி இருந்தமையினை அவதானிக்க முடிந்தது.


 

மன்னார்


மன்னார், பஜார் பகுதியில்  சில உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தவிர பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும்  அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இன்றைய தினம்(18)  வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், ஒரு சில பகுதிகளில் கடையடைப்புக்கு ஆரதவாகவும் சில பகுதிகளில் ஹர்த்தாலுக்கு ஆதரவு இல்லாதமையையும் காணக் கூடியதாக உள்ளது.   


முல்லைத்தீவு


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில்  பெரும்பாலான பகுதிகள் வழமை போல இயங்க ஆரம்பித்துள்ளன.

போக்குவரத்து சேவைகளும் இடம்பெற்று வருகின்றன. 

எனினும் சில பகுதிகளில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.


கிளிநொச்சி


ஒரு மணித்தியால கடையடைப்புடன் கிளிநொச்சியின் சில பகுதிகளில் வழமைக்கு திரும்பியது.

சேவைச்சந்தை, பொதுச் சேவைகள், வர்த்தக நடவடிக்கைகள், போக்குவரத்து, பாடசாலை உள்ளிட்ட அனைத்தும் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.



அம்பாறை

 இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி   ஆதரவு தெரிவித்த ஹர்த்தாலை அப்பகுதி முஸ்லீம் மக்கள்  நிராகரித்து வழமையான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியன.

இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. 


அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் பொலிஸாருடன் இணைந்து இராணுவமும்  பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும்  அம்பாறை மாவட்டத்தில் தமிழர் செறிந்து வாழும் பகுதியில் ஹர்த்தால் இன்று(18) அனுஸ்டிக்கப்பட்டது.

இருந்த போதிலும் பொதுப்போக்குவரத்து வழமை போன்று இப்பகுதியில் நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது. 

 


திருகோணமலை

 ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பகுதில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் தம்பலகாமம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்தது.

இதன் போது மக்களின் நடமாட்டமும் குறைந்து வீதி வெறிச்சோடி காணப்பட்டது.  


மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில்  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

களுவாஞ்சிக்குடி பிரதேச வர்த்தகர்கள், இதற்கு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மருந்தகங்கள் திறக்கப்பட்டதுடன் அரச நிறுவனங்கள், மற்றும் பாடசாலைகள் என்பன வழமை போல் இடம்பெறுகின்றமையும் அவதானிக்க முடிகின்றது.


வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும்  அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். 


இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும்,  அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர். 


இதனையடுத்து,  கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் அறிவிப்பை வெளியிட்டார்.


எவ்வாறாயினும், ஒரு சில பகுதிகளில் கடையடைப்புக்கு ஆரதவாகவும் சில பகுதிகளில் ஹர்த்தாலுக்கு ஆதரவு இல்லாதமையையும் காணக் கூடியதாக உள்ளது.   

தனி ஒரு கட்சியின் அழைப்பாக காணப்பட்டதால் ஹர்த்தால் பிசுபிசுத்துக் காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கில் கிழக்கில் ஹர்த்தால் எப்படி உண்மை நிலவரம் இதோ வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளதுடன், சில பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம்அதன்படி யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளன. அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன், அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகிறது. மேலும், திருநெல்வேலி சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் சில பகுதிகளில் வியாபாரா நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.மேலும் சாவகச்சேரி நகரில் மரக்கறி சந்தை மற்றும் அதனுடன் இணைந்த கடைத்தொகுதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் ஏனைய தேங்காய் சந்தை, பழக்கடை, மீன் சந்தை தொகுதிகள் பகுதியளவில் இயங்குவதுடன் ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறந்திருப்பதுடன் அரச, தனியார் பொதுப் போக்குவரத்தும் சீராக இயங்குகின்றது.அத்தோடுஇன்றைய தினம் பருத்தித்துறை மந்திகை நகர்களில் சுமார் 90 வீதமான கடைகள் திறந்துள்ளன. போக்குவரத்து சேவைகளும்  வழமைபோன்று இடம் பெற்றுவருகின்றது.மந்திகை சந்தையும் வழமைபோன்று இயங்கிவருகிறது. பருத்தித்துறை சந்தைகளும் வழமைபோன்று இயங்கிவருகிறன.வவுனியாவவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநிலையில் உள்ளதுடன் சில செயற்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது.இதேவேளை கர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், அவர்களது மொத்த வியாபார சந்தைக்கடைத்தொகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது. இதேவேளை பழையபேருந்து நிலையம் மற்றும் பசார்வீதியில் உள்ள இஸ்லாமிய வியாபாரநிலையங்களில் குறிபிட்ட அளவிலான வர்த்தக நிலையங்கள் மட்டும் திறந்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது. இதேவேளை புறநகரப்பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம்,நெடுங்கேணி,கனகராயன்குளம்,புளியங்குளம் பகுதிகளில் அநேகமான வர்த்தக நிலையங்கள் திறந்திருந்ததுடன், சில வர்த்தக நிலையங்கள் கர்த்தாலுக்கு ஆதரவினை தெரிவித்து பூட்டி இருந்தமையினை அவதானிக்க முடிந்தது. மன்னார்மன்னார், பஜார் பகுதியில்  சில உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தவிர பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும்  அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இன்றைய தினம்(18)  வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.எவ்வாறாயினும், ஒரு சில பகுதிகளில் கடையடைப்புக்கு ஆரதவாகவும் சில பகுதிகளில் ஹர்த்தாலுக்கு ஆதரவு இல்லாதமையையும் காணக் கூடியதாக உள்ளது.   முல்லைத்தீவுமுல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில்  பெரும்பாலான பகுதிகள் வழமை போல இயங்க ஆரம்பித்துள்ளன.போக்குவரத்து சேவைகளும் இடம்பெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.கிளிநொச்சிஒரு மணித்தியால கடையடைப்புடன் கிளிநொச்சியின் சில பகுதிகளில் வழமைக்கு திரும்பியது.சேவைச்சந்தை, பொதுச் சேவைகள், வர்த்தக நடவடிக்கைகள், போக்குவரத்து, பாடசாலை உள்ளிட்ட அனைத்தும் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.அம்பாறை இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி   ஆதரவு தெரிவித்த ஹர்த்தாலை அப்பகுதி முஸ்லீம் மக்கள்  நிராகரித்து வழமையான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியன.இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் பொலிஸாருடன் இணைந்து இராணுவமும்  பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.எனினும்  அம்பாறை மாவட்டத்தில் தமிழர் செறிந்து வாழும் பகுதியில் ஹர்த்தால் இன்று(18) அனுஸ்டிக்கப்பட்டது.இருந்த போதிலும் பொதுப்போக்குவரத்து வழமை போன்று இப்பகுதியில் நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது.  திருகோணமலை ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பகுதில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் தம்பலகாமம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்தது.இதன் போது மக்களின் நடமாட்டமும் குறைந்து வீதி வெறிச்சோடி காணப்பட்டது.  மட்டக்களப்புமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில்  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.களுவாஞ்சிக்குடி பிரதேச வர்த்தகர்கள், இதற்கு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் மருந்தகங்கள் திறக்கப்பட்டதுடன் அரச நிறுவனங்கள், மற்றும் பாடசாலைகள் என்பன வழமை போல் இடம்பெறுகின்றமையும் அவதானிக்க முடிகின்றது.வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும்  அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும்,  அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து,  கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் அறிவிப்பை வெளியிட்டார்.எவ்வாறாயினும், ஒரு சில பகுதிகளில் கடையடைப்புக்கு ஆரதவாகவும் சில பகுதிகளில் ஹர்த்தாலுக்கு ஆதரவு இல்லாதமையையும் காணக் கூடியதாக உள்ளது.   தனி ஒரு கட்சியின் அழைப்பாக காணப்பட்டதால் ஹர்த்தால் பிசுபிசுத்துக் காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement