• May 13 2024

வெளிநாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை எப்படி திருப்பிக்கொண்டு வருவது..? பீரிஸ் கேள்வி samugammedia

Chithra / Jun 21st 2023, 6:55 pm
image

Advertisement

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் காரணமாக வெளிநாட்டு வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை மீள நாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் புதிய சட்டமூலத்தில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாரியளவிலான மோசடிகள் அல்லது ஊழல்கள் இடம்பெறும் பட்சத்தில் அந்தப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்படுவதாகவும், அந்தப் பணத்தை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பதே முதன்மையான தேவை எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனை இலங்கை தனித்து செய்ய முடியாது எனவும், அதற்காக சர்வதேச அமைப்புகளுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் துரதிஷ்டவசமாக ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் இலங்கையை சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைக்கும் எந்தவொரு பிரிவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சட்டத்திற்குத் தேவையான பலத்தை அளிக்கும் வகையில், சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெற்று அதற்குரிய ஏற்பாடுகளைச் சேர்க்க வேண்டும் என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை எப்படி திருப்பிக்கொண்டு வருவது. பீரிஸ் கேள்வி samugammedia பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் காரணமாக வெளிநாட்டு வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை மீள நாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் புதிய சட்டமூலத்தில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.பாரியளவிலான மோசடிகள் அல்லது ஊழல்கள் இடம்பெறும் பட்சத்தில் அந்தப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்படுவதாகவும், அந்தப் பணத்தை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பதே முதன்மையான தேவை எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.இதனை இலங்கை தனித்து செய்ய முடியாது எனவும், அதற்காக சர்வதேச அமைப்புகளுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் துரதிஷ்டவசமாக ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் இலங்கையை சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைக்கும் எந்தவொரு பிரிவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.அந்தச் சட்டத்திற்குத் தேவையான பலத்தை அளிக்கும் வகையில், சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெற்று அதற்குரிய ஏற்பாடுகளைச் சேர்க்க வேண்டும் என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement