• May 19 2024

தமிழர் பகுதிகளில் இராணுவ குறைப்பு : இலங்கை தமிழ் சிவில் சமூக கோரிக்கைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஆதரவு!

Sharmi / Jan 12th 2023, 12:58 pm
image

Advertisement

தமிழ்த் தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படும் வேளையில், 1983க்கு முந்திய நிலைக்கு தமிழர் தாயகத்தில் இராணுவப் பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்றும், எந்த விதமான சம்பிரதாயமான பேச்சுவார்த்தைகளும் தொடங்குவதற்கு முன்னர், தமிழர்கள் வாழும் பகுதிகளில் 25% இராணுவ பிரசன்னத்தை நல்லெண்ண அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கம் குறைக்க வேண்டும் என்ற இலங்கையை தளமாகக் கொண்ட தமிழ் சிவில் சமூகக் குழுக்களின் கூட்டு கோரிக்கைக்கு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல புலம்பெயர் தமிழ் குழுக்கள் முழு மனதுடன் ஆதரித்துள்ளதுள்ளன.

இது தொடர்பில் அமெரிக்க அமைப்புகள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது


மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மற்றும் பலர் அடங்கிய இலங்கைத் தமிழ் சிவில் சமூகத்தின் கூட்டு கோரிக்கை இங்கே:

1) * எந்தவொரு உத்தியோகபூர்வமான பேச்சுக்களும் ஆரம்பிக்க முன்னர், வடகிழக்கில் இராணுவ பலத்தை தற்போதைய மட்டத்தின் 25 வீதத்தால் ஆவது குறைத்து, தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உரிய சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் இலங்கை அரசானது தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.
* எந்த உடன்பாடும் எட்டப்படுவதற்கு முன், வடகிழக்கின் இராணுவ எண்ணிக்கை 1983க்கு முந்தைய நிலைக்குக் குறைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உடனடி பிரச்சனையான இராணுவமயமாக்கலைக் குறைத்து இலங்கை அரசு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தாதவிடத்து, பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது அர்த்தம் அற்றது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

2) * தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும். இதில் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைக்கு கையெழுத்திட்ட இலங்கை தமிழ் சிவில் சமூகத்தினர்;

1) ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நல்லை ஆதீனம் – யாழ்ப்பாணம்.
2) வண. பிதா. ஜோசப் மேரி (S J) - மட்டக்களப்பு.
3) திரு.அ.விஜயகுமார், தலைவர் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.
4) திரு.நி.தர்சன், தலைவர் - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் - கலை, கலாசார பீடம் (மட்டக்களப்பு).
5) திருமதி யோ. கனகரஞ்சினி, தலைவர் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் - வடக்கு கிழக்கு மாகாணங்கள்.
6) தவத்திரு அகத்தியர் அடிகளார், தென்கயிலை ஆதீனம் - திருகோணமலை.
7) வண. பிதா. கந்தையா ஜெகதாஸ் - மட்டக்களப்பு.
8) தவத்திரு வேலன் சுவாமிகள், சிவகுரு ஆதீனம் – யாழ்ப்பாணம்.
9) வண. பிதா. செபமாலை பிரின்சன் - மட்டக்களப்பு.
10) வண. பிதா. ரொபேர்ட் சசிகரன் - யாழ்ப்பாணம்.
11) திரு.ம.கோமகன், அமைப்பாளர் - குரலற்றவர்களின் குரல்.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைக்கு ஆதரித்த அமெரிக்க தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் பட்டியல் 

1) வட அமெரிக்கா தமிழ்ச் சங்கம் (FeTNA); contact@fetna.org
2) இலங்கைத் தமிழ்ச் சங்கம்; president@sangam.org
3) தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கியம் (PAC); info@tamilamericansunited.com
4) ஐக்கிய அமெரிக்க தமிழ் செயல் குழு (USTAG); info@theustag.org
5) உலகத் தமிழர் அமைப்பு; wtogroup@gmail.com


தமிழர் பகுதிகளில் இராணுவ குறைப்பு : இலங்கை தமிழ் சிவில் சமூக கோரிக்கைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஆதரவு தமிழ்த் தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படும் வேளையில், 1983க்கு முந்திய நிலைக்கு தமிழர் தாயகத்தில் இராணுவப் பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்றும், எந்த விதமான சம்பிரதாயமான பேச்சுவார்த்தைகளும் தொடங்குவதற்கு முன்னர், தமிழர்கள் வாழும் பகுதிகளில் 25% இராணுவ பிரசன்னத்தை நல்லெண்ண அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கம் குறைக்க வேண்டும் என்ற இலங்கையை தளமாகக் கொண்ட தமிழ் சிவில் சமூகக் குழுக்களின் கூட்டு கோரிக்கைக்கு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல புலம்பெயர் தமிழ் குழுக்கள் முழு மனதுடன் ஆதரித்துள்ளதுள்ளன.இது தொடர்பில் அமெரிக்க அமைப்புகள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுமதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மற்றும் பலர் அடங்கிய இலங்கைத் தமிழ் சிவில் சமூகத்தின் கூட்டு கோரிக்கை இங்கே:1) * எந்தவொரு உத்தியோகபூர்வமான பேச்சுக்களும் ஆரம்பிக்க முன்னர், வடகிழக்கில் இராணுவ பலத்தை தற்போதைய மட்டத்தின் 25 வீதத்தால் ஆவது குறைத்து, தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உரிய சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் இலங்கை அரசானது தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.* எந்த உடன்பாடும் எட்டப்படுவதற்கு முன், வடகிழக்கின் இராணுவ எண்ணிக்கை 1983க்கு முந்தைய நிலைக்குக் குறைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உடனடி பிரச்சனையான இராணுவமயமாக்கலைக் குறைத்து இலங்கை அரசு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தாதவிடத்து, பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது அர்த்தம் அற்றது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.2) * தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும். இதில் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும்.இந்த கோரிக்கைக்கு கையெழுத்திட்ட இலங்கை தமிழ் சிவில் சமூகத்தினர்;1) ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நல்லை ஆதீனம் – யாழ்ப்பாணம்.2) வண. பிதா. ஜோசப் மேரி (S J) - மட்டக்களப்பு.3) திரு.அ.விஜயகுமார், தலைவர் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.4) திரு.நி.தர்சன், தலைவர் - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் - கலை, கலாசார பீடம் (மட்டக்களப்பு).5) திருமதி யோ. கனகரஞ்சினி, தலைவர் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் - வடக்கு கிழக்கு மாகாணங்கள்.6) தவத்திரு அகத்தியர் அடிகளார், தென்கயிலை ஆதீனம் - திருகோணமலை.7) வண. பிதா. கந்தையா ஜெகதாஸ் - மட்டக்களப்பு.8) தவத்திரு வேலன் சுவாமிகள், சிவகுரு ஆதீனம் – யாழ்ப்பாணம்.9) வண. பிதா. செபமாலை பிரின்சன் - மட்டக்களப்பு.10) வண. பிதா. ரொபேர்ட் சசிகரன் - யாழ்ப்பாணம்.11) திரு.ம.கோமகன், அமைப்பாளர் - குரலற்றவர்களின் குரல்.மேற்குறிப்பிட்ட கோரிக்கைக்கு ஆதரித்த அமெரிக்க தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் பட்டியல் 1) வட அமெரிக்கா தமிழ்ச் சங்கம் (FeTNA); contact@fetna.org2) இலங்கைத் தமிழ்ச் சங்கம்; president@sangam.org3) தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கியம் (PAC); info@tamilamericansunited.com4) ஐக்கிய அமெரிக்க தமிழ் செயல் குழு (USTAG); info@theustag.org5) உலகத் தமிழர் அமைப்பு; wtogroup@gmail.com

Advertisement

Advertisement

Advertisement