• May 12 2025

அரசாங்கம் தற்போது மேற்கொள்கின்ற கைதுகள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள்; இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டு..!

Sharmi / Jan 28th 2025, 1:19 pm
image

அரசாங்கம் தற்போது மேற்கொள்கின்ற கைதுகள் எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக திருமலை  மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று(28)  இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று கைது செய்யப்படுகின்றவர்கள் எந்த நிலையில், எப்படி கைது செய்யப்படுகிறார்கள்? என்பதை வைத்துப் பார்க்கின்ற போது அரசாங்கத்தின் மீது எங்களுக்கு சந்தேகம் நிலவுகின்றது.

தற்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற சந்தர்ப்பத்தில், இந்த கைதுகள் இடம்பெறுகின்றன. இதில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.

மேலும், மீண்டும் இந்த ராஜபக்ஷ அணியினரை பலப்படுத்துவது உள்நோக்கமாக இருக்குமோ என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்ற விடயம் என்னவென்றால், நீங்கள் தேர்தல் காலங்களில் மேடைகளில், என்ன விடயங்களை கூறினீர்களோ அந்த விடயங்களை நிறைவேற்றுங்கள். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

எந்த அரசியல்வாதியாக இருந்தாலும், எந்த தராதரத்தில் இருந்தாலும், ஊழல் புரிந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை.

அரச சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்குமானால், அதனால் மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமானால் அவர்களை சட்டத்தின் முன்கொண்டுவந்து, சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதைச் செய்யுங்கள் என்றே அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.

குறிப்பாக, தேர்தல் காலங்களில் பரவலாக பேசப்பட்ட விடயம்தான் ஈஸ்டர் தாக்குதல். இன்று தேர்தல்கள் முடிந்துவிட்டன . ஈஸ்டர் தாக்கல் குறித்த பேச்சுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆகையால், அரசியலுக்காக நடாத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறிவது அரசாங்கத்தின் கடமை என்றும் தெரிவித்தார்.

அரசாங்கம் தற்போது மேற்கொள்கின்ற கைதுகள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள்; இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டு. அரசாங்கம் தற்போது மேற்கொள்கின்ற கைதுகள் எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக திருமலை  மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.கிண்ணியாவில் இன்று(28)  இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இன்று கைது செய்யப்படுகின்றவர்கள் எந்த நிலையில், எப்படி கைது செய்யப்படுகிறார்கள் என்பதை வைத்துப் பார்க்கின்ற போது அரசாங்கத்தின் மீது எங்களுக்கு சந்தேகம் நிலவுகின்றது.தற்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற சந்தர்ப்பத்தில், இந்த கைதுகள் இடம்பெறுகின்றன. இதில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன. மேலும், மீண்டும் இந்த ராஜபக்ஷ அணியினரை பலப்படுத்துவது உள்நோக்கமாக இருக்குமோ என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.இந்த நிலையில், நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்ற விடயம் என்னவென்றால், நீங்கள் தேர்தல் காலங்களில் மேடைகளில், என்ன விடயங்களை கூறினீர்களோ அந்த விடயங்களை நிறைவேற்றுங்கள். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.எந்த அரசியல்வாதியாக இருந்தாலும், எந்த தராதரத்தில் இருந்தாலும், ஊழல் புரிந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை.அரச சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்குமானால், அதனால் மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமானால் அவர்களை சட்டத்தின் முன்கொண்டுவந்து, சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதைச் செய்யுங்கள் என்றே அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.குறிப்பாக, தேர்தல் காலங்களில் பரவலாக பேசப்பட்ட விடயம்தான் ஈஸ்டர் தாக்குதல். இன்று தேர்தல்கள் முடிந்துவிட்டன . ஈஸ்டர் தாக்கல் குறித்த பேச்சுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.ஆகையால், அரசியலுக்காக நடாத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறிவது அரசாங்கத்தின் கடமை என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now