• Nov 17 2024

எதிர்க்கட்சிக்கு நான் செல்வது தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்ல- சபையில் மொட்டு கட்சி எம்.பி விளக்கம்..!

Sharmi / Sep 3rd 2024, 1:47 pm
image

எதிர்க்கட்சிக்கு நான் செல்வது தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்ல என்றும் மக்கள் நலனுக்காகவே இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி இன்று(3) விசேட அறிக்கையொன்றை விடுத்து எதிர்க்கட்சியில் அமர்ந்தார்.

இந்நிலையில் அவரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகூப்பி வணக்கம் செலுத்தி அவரை வரவேற்றனர்.

' பொதுஜன பெரமுன ஊடாக தான் எனக்கு மக்கள் ஆணை கிடைத்தது. தங்போது  அந்த கட்சியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது.

எனவே, துயரப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையிலேயே இருக்கின்றேன்.

ஆகவே ஏழைகளின் பக்கம் இருக்கின்ற ஒருவருக்காக எனது ஆதரவை தெரிவிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றேன்.

ஆகவே நான் எதிரணிக்கு செல்ல எதிர்பார்க்கின்றேன்.

இதுவரை காலமும்  எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன்.

இந்த நாட்டிலே சமுர்த்தி மற்றும் அஸ்வெசும ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம்.

தாம் இன்று எதிர்க்கட்சிக்கு செல்வது தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்ல என்றும் மக்கள் நலனுக்காகவே' என தெரிவித்ததுடன் சபாநாயகருக்கும் நன்றியை தெரிவித்தார்.


எதிர்க்கட்சிக்கு நான் செல்வது தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்ல- சபையில் மொட்டு கட்சி எம்.பி விளக்கம். எதிர்க்கட்சிக்கு நான் செல்வது தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்ல என்றும் மக்கள் நலனுக்காகவே இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி இன்று(3) விசேட அறிக்கையொன்றை விடுத்து எதிர்க்கட்சியில் அமர்ந்தார்.இந்நிலையில் அவரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகூப்பி வணக்கம் செலுத்தி அவரை வரவேற்றனர்.' பொதுஜன பெரமுன ஊடாக தான் எனக்கு மக்கள் ஆணை கிடைத்தது. தங்போது  அந்த கட்சியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது.எனவே, துயரப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையிலேயே இருக்கின்றேன்.ஆகவே ஏழைகளின் பக்கம் இருக்கின்ற ஒருவருக்காக எனது ஆதரவை தெரிவிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றேன்.ஆகவே நான் எதிரணிக்கு செல்ல எதிர்பார்க்கின்றேன்.இதுவரை காலமும்  எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன்.இந்த நாட்டிலே சமுர்த்தி மற்றும் அஸ்வெசும ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம்.தாம் இன்று எதிர்க்கட்சிக்கு செல்வது தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்ல என்றும் மக்கள் நலனுக்காகவே' என தெரிவித்ததுடன் சபாநாயகருக்கும் நன்றியை தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement