• Apr 28 2024

ஒரே வாரத்தில் என்னால் டெங்குவை கட்டுப்படுத்த முடியும்! சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள் அமைச்சர் கோரிக்கை samugammedia

Chithra / May 11th 2023, 9:39 am
image

Advertisement

ஒரே வாரத்தில் தம்மால் டெங்கு பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தமக்கு சந்தர்ப்பம் வழங்கினால் டெங்குவை கட்டுப்படுத்திவிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு திட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சுகாதார அமைச்சர் தமது நல்ல நண்பர் எனவும், தற்போது அவருக்கு என்னவாயிற்று என்பது தமக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அனைத்து அதிகாரிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து டெங்குவை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்பினை மேற்கொள்வதற்கு ஓர் சந்தர்ப்பம் வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

எந்தவிதமான சம்பளங்களோ, வாகனங்களோ, பதவிகளோ வழங்காது டெங்கு ஒழிப்பு பொறுப்பினை மட்டும் வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது அறிவுறுத்தல்களை செவிமடுக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஒரே வாரத்தில் என்னால் டெங்குவை கட்டுப்படுத்த முடியும் சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள் அமைச்சர் கோரிக்கை samugammedia ஒரே வாரத்தில் தம்மால் டெங்கு பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.அரசாங்கம் தமக்கு சந்தர்ப்பம் வழங்கினால் டெங்குவை கட்டுப்படுத்திவிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.டெங்கு ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.டெங்கு ஒழிப்பு திட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போதைய சுகாதார அமைச்சர் தமது நல்ல நண்பர் எனவும், தற்போது அவருக்கு என்னவாயிற்று என்பது தமக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அனைத்து அதிகாரிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து டெங்குவை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.டெங்கு ஒழிப்பினை மேற்கொள்வதற்கு ஓர் சந்தர்ப்பம் வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.எந்தவிதமான சம்பளங்களோ, வாகனங்களோ, பதவிகளோ வழங்காது டெங்கு ஒழிப்பு பொறுப்பினை மட்டும் வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது அறிவுறுத்தல்களை செவிமடுக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement