• Oct 05 2024

220 இலட்சம் மக்களும் பொருளாதார நன்மைகளை அனுபவிக்கும் நாட்டை உருவாக்குவேன்- சஜித்!

Tamil nila / Feb 10th 2023, 8:10 pm
image

Advertisement

நாட்டை அழித்து, நாட்டை வங்குரோத்தடையச் செய்து, இந்நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்ட பின்னரும் தேர்தலை ஒத்திவைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தேர்தலை பிற்போட்டால் முழு நாடும் வீதியில் இறங்கி, கொழும்புக்கு வந்து இந்நாட்டு மக்கள் உரிமைகளை, மக்கள் இறையாண்மையை மக்கள் பலத்தின் ஊடாக வென்றெடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஹப்புத்தளையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.


சகலவற்றினதும் விலையும் உயர்ந்துள்ள இந்நேரத்தில், வட்டி விகிதங்கள் அதிகரித்து, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் கூட ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்நேரத்தில் இருள் சூழ்ந்த தாய்நாட்டை மீட்க ஒன்றிணையுமாறும், வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்டு மீண்டும் 220 இலட்சம் மக்களும் பொருளாதார நன்மைகளை அனுபவிக்கும் நாட்டை உருவாக்குவேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.



மக்கள் துயரத்தில் இருக்கும் நேரத்தில், மனசாட்சியற்ற யானை-காக்கை-மொட்டு அரசாங்கம் சுகபோகங்களை அநுபவித்து வருவதாகவும், எனவே அவர்களை விரட்டியடித்து அபிவிருத்தியை மையமாகக் கொண்ட பிரேமதாஸ அபிவிருத்தி யுகத்தை உருவாக்க ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்தார்.

220 இலட்சம் மக்களும் பொருளாதார நன்மைகளை அனுபவிக்கும் நாட்டை உருவாக்குவேன்- சஜித் நாட்டை அழித்து, நாட்டை வங்குரோத்தடையச் செய்து, இந்நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்ட பின்னரும் தேர்தலை ஒத்திவைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தேர்தலை பிற்போட்டால் முழு நாடும் வீதியில் இறங்கி, கொழும்புக்கு வந்து இந்நாட்டு மக்கள் உரிமைகளை, மக்கள் இறையாண்மையை மக்கள் பலத்தின் ஊடாக வென்றெடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஹப்புத்தளையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.சகலவற்றினதும் விலையும் உயர்ந்துள்ள இந்நேரத்தில், வட்டி விகிதங்கள் அதிகரித்து, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் கூட ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்நேரத்தில் இருள் சூழ்ந்த தாய்நாட்டை மீட்க ஒன்றிணையுமாறும், வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்டு மீண்டும் 220 இலட்சம் மக்களும் பொருளாதார நன்மைகளை அனுபவிக்கும் நாட்டை உருவாக்குவேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.மக்கள் துயரத்தில் இருக்கும் நேரத்தில், மனசாட்சியற்ற யானை-காக்கை-மொட்டு அரசாங்கம் சுகபோகங்களை அநுபவித்து வருவதாகவும், எனவே அவர்களை விரட்டியடித்து அபிவிருத்தியை மையமாகக் கொண்ட பிரேமதாஸ அபிவிருத்தி யுகத்தை உருவாக்க ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement