• May 18 2024

மிக விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி உண்மையை தெளிவுபடுத்துவேன்! – சிவாஜிலிங்கம் samugammedia

Chithra / Aug 7th 2023, 8:44 pm
image

Advertisement

பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தொடர்பில் மிக விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி உண்மையை தெளிவுபடுத்தவுள்ளேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கட்சியினுடைய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.

தேவைப்படின் இது தொடர்பில் மிக விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெளிவுபடுத்தவுள்ளேன்.

கட்சிக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினோம். அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கடிதம் எழுதியமை தொடர்பிலும் கதைக்கப்பட்டமை உண்மையே எனத் தெரிவித்தார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

அந்த சமயத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான- முற்றிலும் நேர்மாறாக தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இந்நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்தது. அவர் பதவிவிலகாததையடுத்து, கட்சியை விட்டு நீக்கப்படுவதாக நேற்று நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

மிக விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி உண்மையை தெளிவுபடுத்துவேன் – சிவாஜிலிங்கம் samugammedia பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தொடர்பில் மிக விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி உண்மையை தெளிவுபடுத்தவுள்ளேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.தமிழ்த் தேசிய கட்சியினுடைய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.தேவைப்படின் இது தொடர்பில் மிக விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெளிவுபடுத்தவுள்ளேன்.கட்சிக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினோம். அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கடிதம் எழுதியமை தொடர்பிலும் கதைக்கப்பட்டமை உண்மையே எனத் தெரிவித்தார்.13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.அந்த சமயத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான- முற்றிலும் நேர்மாறாக தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.இந்நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்தது. அவர் பதவிவிலகாததையடுத்து, கட்சியை விட்டு நீக்கப்படுவதாக நேற்று நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement