• May 07 2024

கட்சிப் பதவியிலிருந்து சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டாரா..? சிறிகாந்தா வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Aug 7th 2023, 8:45 pm
image

Advertisement

தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் தாம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம். சிவாஜிலிங்கம் தனியாக இந்தியாவுக்கு கடிதம் எழுதியது தொடர்பிலும் ஆராயப்பட்டது. 

ஆனால் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சிவாஜிலிங்கம் நீக்கப்படுகிறார் என கட்சிக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.

சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் எமது கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்கின்றார் என சிறீகாந்தா தெரிவித்தார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

அந்த சமயத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான- முற்றிலும் நேர்மாறாக தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இந்நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்தது. அவர் பதவிவிலகாததையடுத்து, கட்சியை விட்டு நீக்கப்படுவதாக நேற்று நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

கட்சிப் பதவியிலிருந்து சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டாரா. சிறிகாந்தா வெளியிட்ட அறிவிப்பு samugammedia தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்தார்.நேற்று நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் தாம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம். சிவாஜிலிங்கம் தனியாக இந்தியாவுக்கு கடிதம் எழுதியது தொடர்பிலும் ஆராயப்பட்டது. ஆனால் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சிவாஜிலிங்கம் நீக்கப்படுகிறார் என கட்சிக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் எமது கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்கின்றார் என சிறீகாந்தா தெரிவித்தார்.13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.அந்த சமயத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான- முற்றிலும் நேர்மாறாக தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.இந்நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்தது. அவர் பதவிவிலகாததையடுத்து, கட்சியை விட்டு நீக்கப்படுவதாக நேற்று நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement