• Dec 27 2024

வாழ்வில் எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெற்று : அமைதியுடன் வாழ வாழ்த்துகின்றேன் - பிரதி அமைச்சர் பிரதீப்

Tharmini / Dec 24th 2024, 4:46 pm
image

விண்ணுலக தேவன் மண்ணுலகில் அவதரித்து, பாவங்கள் போக்கிட பாரினில் வந்துதித்த இயேசு பாலகன் பிறந்த நன்னாள் இந்நாளாகும்.

இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் மலர்ந்த இவ் நத்தார் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட நத்தார்தின வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறை மகன் இயேசு மனிதராய் அவதரித்த  இப்புனித நாளில் கால காலமாக எம் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்ட இனவாதம், மதவாதம், அற்ற அனைத்து இலங்கையரதும் மனங்களை வென்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் எதிர்பார்ப்பு, வளமான நாடு அழகான வாழ்க்கையினை கட்டி எழுப்புவதாகும்.

வளமிக்க நாடாக முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றால் நாம் இறைமகன் போதித்த அன்பு, பணிவு சகோதரத்துவம், பகிர்ந்து வாழ்தல் என்னும் உயரிய நெறிகளை வாழ்வில்  கடைப்பிடிப்பதன் மூலமே, நாம் இலங்கையர் என்ற ரீதியில் எமது இலக்கை அடைய முடியும்.

ஒருவருக்கொருவர் பகைமையும், காழ்புணர்ச்சி, அரசியல் சூழ்ச்சிகளை நீக்கி, இறைமகன் இயேசு போதித்தது போல "நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும்" என்ற கட்டளைக்கு இணங்க ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்து,  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வில் எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெற்று அமைதியுடனும்  சமாதானத்துடனும் வாழ வாழ்த்துகின்றேன்.

அனைவருக்கும் இனிய நத்தார்  திருநாள் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்வில் எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெற்று : அமைதியுடன் வாழ வாழ்த்துகின்றேன் - பிரதி அமைச்சர் பிரதீப் விண்ணுலக தேவன் மண்ணுலகில் அவதரித்து, பாவங்கள் போக்கிட பாரினில் வந்துதித்த இயேசு பாலகன் பிறந்த நன்னாள் இந்நாளாகும்.இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் மலர்ந்த இவ் நத்தார் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட நத்தார்தின வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இறை மகன் இயேசு மனிதராய் அவதரித்த  இப்புனித நாளில் கால காலமாக எம் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்ட இனவாதம், மதவாதம், அற்ற அனைத்து இலங்கையரதும் மனங்களை வென்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் எதிர்பார்ப்பு, வளமான நாடு அழகான வாழ்க்கையினை கட்டி எழுப்புவதாகும்.வளமிக்க நாடாக முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றால் நாம் இறைமகன் போதித்த அன்பு, பணிவு சகோதரத்துவம், பகிர்ந்து வாழ்தல் என்னும் உயரிய நெறிகளை வாழ்வில்  கடைப்பிடிப்பதன் மூலமே, நாம் இலங்கையர் என்ற ரீதியில் எமது இலக்கை அடைய முடியும்.ஒருவருக்கொருவர் பகைமையும், காழ்புணர்ச்சி, அரசியல் சூழ்ச்சிகளை நீக்கி, இறைமகன் இயேசு போதித்தது போல "நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும்" என்ற கட்டளைக்கு இணங்க ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்து,  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வில் எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெற்று அமைதியுடனும்  சமாதானத்துடனும் வாழ வாழ்த்துகின்றேன். அனைவருக்கும் இனிய நத்தார்  திருநாள் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement