தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்றுடன் 3000 நாளை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.
இறுதிப்போரின்போதும், அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையினை வலியுறுத்தி தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் மூவாயிரம் நாட்களை கடக்கின்ற நிலையில் அவர்களது போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றது.
இதனையடுத்து இன்றையதினம் அவர்களால் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய அமெரிக்க கொடிகளை ஏந்தியிருந்தனர், தங்களுக்கு சர்வதேசநீதி வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
இந்த மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றினால் நெடுந்தீவை 'ட்ரம்ப் தீவு' என பெயரிட தயார் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீர்மானம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்றுடன் 3000 நாளை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது. இறுதிப்போரின்போதும், அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையினை வலியுறுத்தி தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.இந்நிலையில் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் மூவாயிரம் நாட்களை கடக்கின்ற நிலையில் அவர்களது போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றது.இதனையடுத்து இன்றையதினம் அவர்களால் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய அமெரிக்க கொடிகளை ஏந்தியிருந்தனர், தங்களுக்கு சர்வதேசநீதி வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.