• Nov 23 2024

சட்டவிரோத பிரமிட் திட்ட மோசடியில் சிக்கிய மக்கள் - 300 கோடி பணம் இழப்பு

Chithra / Jul 9th 2024, 11:34 am
image


இணையத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களை பார்த்து அதிக நிதிப் பலன்களை வழங்கப்படுவதாக கூறுப்படும் “Bannercut" எனும் சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் இணைந்து நாடளாவிய ரீதியில் பெரும் எண்ணிக்கையானவர்கள் சுமார் 300 கோடி ரூபாவை இழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஐம்பதாயிரம் ரூபாய் முதல் பத்து கோடி ரூபாய் வரை வைப்பு செய்து இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.

இந்த பிரமிட் திட்டம் 2015 முதல் செயல்பட்டு வந்துள்ளது. அதன் பிறகு ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2019 முதல் செயல்படவில்லை. 

அதன்பிறகு, இந்த பிரமிட் திட்டத்தை நடத்தியவர் பணம் முதலீடு செய்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவில்லை, முதலீடு செய்த பணமோ, அதற்கான வட்டிப் பணத்தை கூட வழங்கவில்லையென கூறப்படுகிறது.

இந்த பிரமிட் திட்டம் நாரஹேன்பிட்டி முகவரியில் உள்ள விளம்பர நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

இந்த விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் அரசியல் தொடர்புகளை கொண்டவரெனவும் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் ஏராளமான பாடசாலை ஆசிரியர்கள், வைத்தியர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், பொலிஸார், ஆயுதப்படை உறுப்பினர்கள், கிராம அதிகாரிகள் மற்றும் அரசு, தனியார் துறை ஓய்வு பெற்றவர்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

இவ்வாறான நிதி நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாமல் வணிக நிறுவனமாக பதிவு செய்து மக்களை ஏமாற்றி இயங்கி வருவது தெரியவந்துள்ளது.


சட்டவிரோத பிரமிட் திட்ட மோசடியில் சிக்கிய மக்கள் - 300 கோடி பணம் இழப்பு இணையத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களை பார்த்து அதிக நிதிப் பலன்களை வழங்கப்படுவதாக கூறுப்படும் “Bannercut" எனும் சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் இணைந்து நாடளாவிய ரீதியில் பெரும் எண்ணிக்கையானவர்கள் சுமார் 300 கோடி ரூபாவை இழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.ஐம்பதாயிரம் ரூபாய் முதல் பத்து கோடி ரூபாய் வரை வைப்பு செய்து இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.இந்த பிரமிட் திட்டம் 2015 முதல் செயல்பட்டு வந்துள்ளது. அதன் பிறகு ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2019 முதல் செயல்படவில்லை. அதன்பிறகு, இந்த பிரமிட் திட்டத்தை நடத்தியவர் பணம் முதலீடு செய்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவில்லை, முதலீடு செய்த பணமோ, அதற்கான வட்டிப் பணத்தை கூட வழங்கவில்லையென கூறப்படுகிறது.இந்த பிரமிட் திட்டம் நாரஹேன்பிட்டி முகவரியில் உள்ள விளம்பர நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் அரசியல் தொடர்புகளை கொண்டவரெனவும் தெரியவந்துள்ளது.இந்த மோசடியில் ஏராளமான பாடசாலை ஆசிரியர்கள், வைத்தியர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், பொலிஸார், ஆயுதப்படை உறுப்பினர்கள், கிராம அதிகாரிகள் மற்றும் அரசு, தனியார் துறை ஓய்வு பெற்றவர்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.இவ்வாறான நிதி நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாமல் வணிக நிறுவனமாக பதிவு செய்து மக்களை ஏமாற்றி இயங்கி வருவது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement