கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை வண்ணாத்தி ஆறு பகுதியின் காட்டுப் பகுதியில் இயற்கை வளங்களை அழித்து அப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அப்பகுதியில் இருந்து இரவு வேளைகளில் வெளி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைவாக இன்றையதினம் தர்மபுரம் பொலிஸார், அப்பகுதியில் சென்று அங்கு சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 15 க்யூப்க்கும் அதிகமான மணலினை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் அம் மணலினை அங்கிருந்து தர்மபுரம் பொலிஸ் நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு- பொலிஸார் நடவடிக்கை. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை வண்ணாத்தி ஆறு பகுதியின் காட்டுப் பகுதியில் இயற்கை வளங்களை அழித்து அப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அப்பகுதியில் இருந்து இரவு வேளைகளில் வெளி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைவாக இன்றையதினம் தர்மபுரம் பொலிஸார், அப்பகுதியில் சென்று அங்கு சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 15 க்யூப்க்கும் அதிகமான மணலினை கைப்பற்றியுள்ளனர்.இந்நிலையில் அம் மணலினை அங்கிருந்து தர்மபுரம் பொலிஸ் நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.