நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவது குறித்துபரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி,உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்தி போலியானது என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, பரீட்சை முடிவுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் தவறான செய்திகளைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வரும் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக காலை வெளியான செய்தி போலியானது என மேற்கண்ட அறிவிப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவது குறித்துபரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி,உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்தி போலியானது என திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்தோடு, பரீட்சை முடிவுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.அதன்படி, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் தவறான செய்திகளைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வரும் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக காலை வெளியான செய்தி போலியானது என மேற்கண்ட அறிவிப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.