• Apr 02 2025

போக்குவரத்து விதிமீறல்களுக்காக தண்டப்பணம் செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

Chithra / Dec 2nd 2023, 10:50 am
image

 போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக மேல் மாகாண தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி தபால் மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, ஹவலோக் டவுன், தெஹிவளை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனித்தெரு, பத்தரமுல்ல, கல்கிஸ்ஸ, நுகேகொட மற்றும் சீதாவகபுர ஆகிய தபால் நிலையங்களில் 24 மணிநேரமும் தண்டப்பணம் செலுத்த முடியும் என போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்காக தண்டப்பணம் செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு  போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக மேல் மாகாண தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதி தபால் மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, ஹவலோக் டவுன், தெஹிவளை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனித்தெரு, பத்தரமுல்ல, கல்கிஸ்ஸ, நுகேகொட மற்றும் சீதாவகபுர ஆகிய தபால் நிலையங்களில் 24 மணிநேரமும் தண்டப்பணம் செலுத்த முடியும் என போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement