• Sep 21 2024

சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் அராஜகமே இருக்கும்; ஜனநாயகம் இருக்காது – ரணில் சுட்டிக்காட்டு SamugamMedia

Chithra / Feb 18th 2023, 5:34 pm
image

Advertisement

நாட்டில் குழப்பநிலை நிலவுவதை தடுப்பதற்காக சட்ட ஒழுங்கை பேணுகின்ற அதேவேளை பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை வழங்கப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ரோட்டரி கழக மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் முன்னைய நிலைக்கு கொண்டுவரப்போவதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி  

செயற்துடிப்புள்ள ஜனநாயகத்தை உருவாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய நிர்பந்த நிலையில் மக்களை துன்பப்பட இடமளிக்கப்பட மாட்டாது என வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான அனைத்து தீர்மானங்களையும் அரசாங்கம் எடுக்கும் எனவும் தெரிவித்தார். 

ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் தான் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒரு நாட்டில் ஜனநாயகத்திற்கு முதலில் பொது அமைதி தேவை எனவும் அதற்கு சட்டம் ஒழுங்கை பேணுவது அவசியமானது எனவும் குறிப்பிட்டார். 

சட்டம், ஒழுங்கு மற்றும் பொருளாதார மீட்சி இல்லாத நாட்டில் அராஜகமே இருக்கும் என்றும் மாறாக ஜனநாயகம் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.


சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் அராஜகமே இருக்கும்; ஜனநாயகம் இருக்காது – ரணில் சுட்டிக்காட்டு SamugamMedia நாட்டில் குழப்பநிலை நிலவுவதை தடுப்பதற்காக சட்ட ஒழுங்கை பேணுகின்ற அதேவேளை பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை வழங்கப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ரோட்டரி கழக மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.இந்த வருட இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் முன்னைய நிலைக்கு கொண்டுவரப்போவதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி  செயற்துடிப்புள்ள ஜனநாயகத்தை உருவாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய நிர்பந்த நிலையில் மக்களை துன்பப்பட இடமளிக்கப்பட மாட்டாது என வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான அனைத்து தீர்மானங்களையும் அரசாங்கம் எடுக்கும் எனவும் தெரிவித்தார். ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் தான் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒரு நாட்டில் ஜனநாயகத்திற்கு முதலில் பொது அமைதி தேவை எனவும் அதற்கு சட்டம் ஒழுங்கை பேணுவது அவசியமானது எனவும் குறிப்பிட்டார். சட்டம், ஒழுங்கு மற்றும் பொருளாதார மீட்சி இல்லாத நாட்டில் அராஜகமே இருக்கும் என்றும் மாறாக ஜனநாயகம் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement