• May 20 2024

யாழில் வாடகைக் காரை ஈடுவைத்த சம்பவம் - சி.ஐ.டியின் முற்றுகைக்குள் சிக்கிய மூவர்! samugammedia

Chithra / Apr 3rd 2023, 5:54 pm
image

Advertisement

யாழில் வாடகைக் காரை ஈடுவைத்த நபர், அதற்கு உதவிய இருவர் என்று 3 பேர் யாழ் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரும்பிராய் பிரதேசத்தில் காரை வாடகைக்கு கொடுப்பவரிடம் ஒரு மாதத்துக்கு முன் காரை வாடகைக்கு  வாங்கி அதற்கான ஒரு இலட்சம் ரூபா முற்பணம் கொடுத்துள்ளனர்.

மேலும் காரைக் கொண்டு சென்ற சில நாட்களின் பின்னர் காரிலிருந்து ஜி.பி.எஸ். கருவி அகற்றப்பட்டுள்ளதோடு வாடகைக்கு எடுத்துச் சென்றவர்களின் தொடர்பையும் துண்டித்துள்ளனர்.

இதுதொடர்பில் காரின் உரிமையாளர் யாழ்.விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.


மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி வீடொன்றில் மேற்படி கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தம்மிடம் வாங்கிய 65 இலட்சம் ரூபா கடன் பணத்துக்கு இந்தக் காரை ஈடுவைத்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

காரை வாடகைக்குப் பெற்றுச் சென்றவர், அதற்குச் சாரதியாகச் செயற்பட்டவர் மற்றும் ஈடுவைப்பதற்கு உதவிய (கடன் வழங்கியவரின் உறவினர்) ஆகியோரைப் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வாடகைக் காரை ஈடுவைத்த சம்பவம் - சி.ஐ.டியின் முற்றுகைக்குள் சிக்கிய மூவர் samugammedia யாழில் வாடகைக் காரை ஈடுவைத்த நபர், அதற்கு உதவிய இருவர் என்று 3 பேர் யாழ் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.உரும்பிராய் பிரதேசத்தில் காரை வாடகைக்கு கொடுப்பவரிடம் ஒரு மாதத்துக்கு முன் காரை வாடகைக்கு  வாங்கி அதற்கான ஒரு இலட்சம் ரூபா முற்பணம் கொடுத்துள்ளனர்.மேலும் காரைக் கொண்டு சென்ற சில நாட்களின் பின்னர் காரிலிருந்து ஜி.பி.எஸ். கருவி அகற்றப்பட்டுள்ளதோடு வாடகைக்கு எடுத்துச் சென்றவர்களின் தொடர்பையும் துண்டித்துள்ளனர்.இதுதொடர்பில் காரின் உரிமையாளர் யாழ்.விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி வீடொன்றில் மேற்படி கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தம்மிடம் வாங்கிய 65 இலட்சம் ரூபா கடன் பணத்துக்கு இந்தக் காரை ஈடுவைத்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.காரை வாடகைக்குப் பெற்றுச் சென்றவர், அதற்குச் சாரதியாகச் செயற்பட்டவர் மற்றும் ஈடுவைப்பதற்கு உதவிய (கடன் வழங்கியவரின் உறவினர்) ஆகியோரைப் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement