• May 12 2024

வறண்ட பிரதேசங்களில் தண்ணீர் விற்பனையில் அதிகரிப்பு! samugammedia

Chithra / Aug 22nd 2023, 9:17 am
image

Advertisement

கடும் வறட்சியுடன் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால், வறண்ட பகுதிகளில் தண்ணீர் விற்பனையும் அதிகரித்துள்ளது.

அநுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை போன்ற கடுமையான வறண்ட காலநிலை உள்ள பிரதேசங்களிலேயே நீர் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

அந்த இடங்களில் லீட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குடிநீர் விற்கப்படுகிறது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கூற்றுப்படி, கிணற்று நீர் சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு அதன் தரத்தை சரிபார்க்கும் அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​குடிநீரை பரிசோதிக்கும் உரிமை பொது சுகாதார பரிசோதகர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் போத்தல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை கூட பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்து பொருத்தமான நிலையில் இருந்தால் அனுமதி வழங்குவார்கள் என்றும் குறித்த அதிகாரி கூறினார்.

எவ்வாறாயினும், இந்நாட்களில் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளதால், சிலர் சுத்திகரிக்காமல் தண்ணீரை விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வறண்ட பிரதேசங்களில் தண்ணீர் விற்பனையில் அதிகரிப்பு samugammedia கடும் வறட்சியுடன் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால், வறண்ட பகுதிகளில் தண்ணீர் விற்பனையும் அதிகரித்துள்ளது.அநுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை போன்ற கடுமையான வறண்ட காலநிலை உள்ள பிரதேசங்களிலேயே நீர் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.அந்த இடங்களில் லீட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குடிநீர் விற்கப்படுகிறது.தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கூற்றுப்படி, கிணற்று நீர் சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு அதன் தரத்தை சரிபார்க்கும் அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.எனினும், அந்த அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​குடிநீரை பரிசோதிக்கும் உரிமை பொது சுகாதார பரிசோதகர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.குடிநீர் போத்தல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை கூட பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்து பொருத்தமான நிலையில் இருந்தால் அனுமதி வழங்குவார்கள் என்றும் குறித்த அதிகாரி கூறினார்.எவ்வாறாயினும், இந்நாட்களில் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளதால், சிலர் சுத்திகரிக்காமல் தண்ணீரை விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement