• May 13 2024

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அதிகரித்த முறைப்பாடுகள் - 2 வருடங்கள் கடந்தும் தீர்வில்லை என குற்றச்சாட்டு samugammedia

Chithra / Oct 3rd 2023, 12:45 pm
image

Advertisement

 


சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 47 சதவீதமான முறைப்பாடுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லையென கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் (2021-2022) கிடைக்கப்பெற்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான 10 ஆயிரத்து 691 முறைப்பாடுகளில் 47 சதவீதமான முறைப்பாடுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லையென  தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வுப் பிரிவு, மனநலப் பிரிவு, சட்டப் பிரிவு ஆகியவற்றுக்குக் கிடைத்த முறைப்பாடுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவ்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது

இதேவேளை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 618 ஆக இருந்தாலும், 287 ஊழியர்களின் தவிகளுக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

கடந்த இரண்டரை வருடங்களாக சிறுவர் துஷ்பிரயோகத்தில் முக்கிய பங்காற்றும் 148 சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பதவியிடங்கள் வெற்றிடமாக உள்ள நிலையில், அதிகார சபையின் பணிகளை முறையாக மேற்கொள்ள முடியவில்லையென தெரியவந்துள்ளது. 


சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அதிகரித்த முறைப்பாடுகள் - 2 வருடங்கள் கடந்தும் தீர்வில்லை என குற்றச்சாட்டு samugammedia  சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 47 சதவீதமான முறைப்பாடுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லையென கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் (2021-2022) கிடைக்கப்பெற்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான 10 ஆயிரத்து 691 முறைப்பாடுகளில் 47 சதவீதமான முறைப்பாடுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லையென  தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வுப் பிரிவு, மனநலப் பிரிவு, சட்டப் பிரிவு ஆகியவற்றுக்குக் கிடைத்த முறைப்பாடுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவ்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளதுஇதேவேளை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 618 ஆக இருந்தாலும், 287 ஊழியர்களின் தவிகளுக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.கடந்த இரண்டரை வருடங்களாக சிறுவர் துஷ்பிரயோகத்தில் முக்கிய பங்காற்றும் 148 சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பதவியிடங்கள் வெற்றிடமாக உள்ள நிலையில், அதிகார சபையின் பணிகளை முறையாக மேற்கொள்ள முடியவில்லையென தெரியவந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement