• Nov 22 2024

நாட்டில் அதிகரித்த வெப்பநிலை; பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை..!

Chithra / Mar 19th 2024, 9:24 am
image

 

கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த பகுதிகளில், மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையை காட்டிலும் அதிகரித்து பதிவாகக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகூடிய வெப்பநிலை நேற்றைய தினம் குருநாகல் மாவட்டத்தில் பதிவானது.

குறித்த மாவட்டத்தில் 38.5 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது.

மனித உடலின் சராசரி வெப்பநிலையானது 37 பாகை செல்லியஸ் ஆகும்.

எனினும், அதனை காட்டிலும் அதிகூடிய வெப்பநிலை பதிவாவதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் அதிகரித்த வெப்பநிலை; பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை.  கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.குறித்த பகுதிகளில், மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையை காட்டிலும் அதிகரித்து பதிவாகக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகூடிய வெப்பநிலை நேற்றைய தினம் குருநாகல் மாவட்டத்தில் பதிவானது.குறித்த மாவட்டத்தில் 38.5 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது.மனித உடலின் சராசரி வெப்பநிலையானது 37 பாகை செல்லியஸ் ஆகும்.எனினும், அதனை காட்டிலும் அதிகூடிய வெப்பநிலை பதிவாவதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement