• May 17 2024

வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா; டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இது போதாது!

Tamil nila / Dec 18th 2022, 4:33 pm
image

Advertisement

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதிபெற்ற இன்னும் 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.


இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கடைசி நாளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற சூழலில் இந்திய அணி களமிறங்கியது. 272 ரன்கள் எடுத்திருந்த வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் இருந்த ஷகிப் அல்ஹசனும், மெஹடி ஹசன் மிர்சாவும் 5வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். போட்டியின் தொடங்கியது முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் ஆவேச தாக்குதலை தொடர்ந்தனர்.




வங்கதேச அணி 283 ரன்கள் எட்டியபோது 8வது விக்கெட்டை பறிகொடுத்தது. மெஹடி ஹசன் மிர்சா இந்திய அணியின் முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அவருக்கு பிறகு வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தனி ஒருவனாக களத்தில் இருந்து போராடிக் கொண்டிருந்த ஷகிப் அல்ஹசனும் 84 ரன்கள் எடுத்தபோது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


முடிவில் வங்கதேச அணி 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்டில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு கேப்டனாக கே.எல்.ராகுலுக்கு இது முதல் வெற்றியாகும். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 மாதங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த அவர் சிறப்பான பந்துவீச்சு மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா; டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இது போதாது வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதிபெற்ற இன்னும் 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கடைசி நாளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற சூழலில் இந்திய அணி களமிறங்கியது. 272 ரன்கள் எடுத்திருந்த வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் இருந்த ஷகிப் அல்ஹசனும், மெஹடி ஹசன் மிர்சாவும் 5வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். போட்டியின் தொடங்கியது முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் ஆவேச தாக்குதலை தொடர்ந்தனர்.வங்கதேச அணி 283 ரன்கள் எட்டியபோது 8வது விக்கெட்டை பறிகொடுத்தது. மெஹடி ஹசன் மிர்சா இந்திய அணியின் முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அவருக்கு பிறகு வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தனி ஒருவனாக களத்தில் இருந்து போராடிக் கொண்டிருந்த ஷகிப் அல்ஹசனும் 84 ரன்கள் எடுத்தபோது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.முடிவில் வங்கதேச அணி 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்டில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு கேப்டனாக கே.எல்.ராகுலுக்கு இது முதல் வெற்றியாகும். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 மாதங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த அவர் சிறப்பான பந்துவீச்சு மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement