இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

குறித்த தூதுக்குழுவினர் இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவில் இந்திய அரசாங்கத்தின் பிரதான பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரனும் அடங்குவதாக வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராயும் நோக்கில் இந்த குழு இலங்கை வருகைத்தந்துள்ளது.

நாட்டிற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் இந்த விஜயத்தின் போது அவர்கள் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ், 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மேலும் நிதியுதவியை இந்தியாவிடம் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை