• Nov 22 2024

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கி வைப்பு...!

Sharmi / Feb 15th 2024, 3:58 pm
image

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் 'இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று(15) மதியம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா , அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு ஆகிய 4மீனவ சமாசங்களுக்கு குறித்த குளிர்சாதன பெட்டிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் மடு தேவாலயத்திற்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கி வைப்பு. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் 'இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று(15) மதியம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா , அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு ஆகிய 4மீனவ சமாசங்களுக்கு குறித்த குளிர்சாதன பெட்டிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் மடு தேவாலயத்திற்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement