• May 21 2024

இந்திய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு திடீர் விஜயம்! அரசியல் தரப்பினருடனும் சந்திப்பு samugammedia

Chithra / Nov 28th 2023, 12:36 pm
image

Advertisement

 

 

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மூன்று நாட்கள் விஜயமாக நாளை வடக்கு மகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் முதல் நாளான நாளை மதவாச்சியில் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை கையளித்த பின்னர் மன்னார் பியர் பகுதிக்கும், திருக்கேதீச்வரர் ஆலயத்துக்கும் செல்லவுள்ளார்.

தொடர்ந்து முதன் நாளின் இறுதி நிகழ்வாக இரவு நேர விருந்துபசாரத்துடன் வடக்கு மாகாண அரசியல் தரப்பினரைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

இரண்டாவது மற்றும் மூன்றாம் நாளான 30ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நயினாதீவுக்குக்கான விஜயமொன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதோடு நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்துக்கும், நாக விகாரைக்கும் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

தொடர்ந்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நூறு பேருக்கான புலமைப்பரிசில்களை கையளிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதோடு, தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு உதவிப்பொருட்களையும் கையளிக்கவுள்ளார்.

இதனைவிடவும், மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்துரையாடவுள்ளார்.

டிசம்பர் மாதத்துடன் இலங்கைக்கான கடமைகளை பூர்த்தி செய்யும் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அதனை தொடர்ந்து அவுஸ்ரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தனது காலத்தில் கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை செலுத்தும் முகமாக கோபால் பாக்லேயின் வடக்கிற்கான இந்த விஜயமானது இடம்பெறவுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு திடீர் விஜயம் அரசியல் தரப்பினருடனும் சந்திப்பு samugammedia   இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மூன்று நாட்கள் விஜயமாக நாளை வடக்கு மகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இந்த விஜயத்தின் முதல் நாளான நாளை மதவாச்சியில் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை கையளித்த பின்னர் மன்னார் பியர் பகுதிக்கும், திருக்கேதீச்வரர் ஆலயத்துக்கும் செல்லவுள்ளார்.தொடர்ந்து முதன் நாளின் இறுதி நிகழ்வாக இரவு நேர விருந்துபசாரத்துடன் வடக்கு மாகாண அரசியல் தரப்பினரைச் சந்தித்து உரையாடவுள்ளார்.இரண்டாவது மற்றும் மூன்றாம் நாளான 30ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நயினாதீவுக்குக்கான விஜயமொன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதோடு நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்துக்கும், நாக விகாரைக்கும் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.தொடர்ந்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நூறு பேருக்கான புலமைப்பரிசில்களை கையளிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதோடு, தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு உதவிப்பொருட்களையும் கையளிக்கவுள்ளார்.இதனைவிடவும், மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்துரையாடவுள்ளார்.டிசம்பர் மாதத்துடன் இலங்கைக்கான கடமைகளை பூர்த்தி செய்யும் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அதனை தொடர்ந்து அவுஸ்ரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ளார்.இந்நிலையில், தனது காலத்தில் கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை செலுத்தும் முகமாக கோபால் பாக்லேயின் வடக்கிற்கான இந்த விஜயமானது இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement