இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

141

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கேரளாவைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் இஸ்ரோவின் தலைவராக பதவி வகிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சிவனின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வரும் முடிவடைய உள்ள நிலையில் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரபல விஞ்ஞானிகளில் ஒருவரான சோமநாத் விண்வெளித்துறையில் பட்ட மேற்படிப்பைத் தங்கப்பதக்கத்துடன் முடித்துள்ளார்.

இவர் எஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்.