• May 18 2024

மாண்டஸ் புயலுக்கு அடுத்து வரும் புயல் தொடர்பில் வெளியான தகவல்

Chithra / Dec 11th 2022, 7:36 am
image

Advertisement

தற்போது வங்கக்கடலில் உருவாகி தாக்கி வரும் மாண்டஸ் புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு மொக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பரிந்துரையின் பேரில் இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘மொக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏமன் நாட்டின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மொக்காவின் பெயரை அடுத்த புயலுக்கு பெயரிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், கத்தார், இலங்கை, ஏமன், தாய்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட 13 நாடுகள் பரிந்துரைத்த பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இப் பெயர்  முடிவு செய்யப்பட்டுள்ளது. 


அதன்படி, வங்கக்கடலில் உருவாகி தற்போது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ் ’ என்று பெயரிடப்பட்டது. 

மாண்டஸ் என்றால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மொழியில் 'புதையல் பெட்டி' என்று பொருள். மந்தாஸ் புயலின் தாக்கம் தணிந்த பிறகு, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘மொக்கா’ என்று பெயரிடப்படும்.

இந்தப் பெயரை ஏமன் பரிந்துரைத்து மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டதை அடுத்து, மண்டேஸை அடுத்து உருவாகும் புயலுக்கு இந்தப் பெயர் சூட்டப் போவதாகத் தகவல்.

மாண்டஸ் புயலுக்கு அடுத்து வரும் புயல் தொடர்பில் வெளியான தகவல் தற்போது வங்கக்கடலில் உருவாகி தாக்கி வரும் மாண்டஸ் புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு மொக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பரிந்துரையின் பேரில் இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘மொக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏமன் நாட்டின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மொக்காவின் பெயரை அடுத்த புயலுக்கு பெயரிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா, பாகிஸ்தான், கத்தார், இலங்கை, ஏமன், தாய்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட 13 நாடுகள் பரிந்துரைத்த பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இப் பெயர்  முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வங்கக்கடலில் உருவாகி தற்போது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ் ’ என்று பெயரிடப்பட்டது. மாண்டஸ் என்றால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மொழியில் 'புதையல் பெட்டி' என்று பொருள். மந்தாஸ் புயலின் தாக்கம் தணிந்த பிறகு, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘மொக்கா’ என்று பெயரிடப்படும்.இந்தப் பெயரை ஏமன் பரிந்துரைத்து மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டதை அடுத்து, மண்டேஸை அடுத்து உருவாகும் புயலுக்கு இந்தப் பெயர் சூட்டப் போவதாகத் தகவல்.

Advertisement

Advertisement

Advertisement