• May 19 2024

வட்டி விகிதங்கள் குறைவடைவதற்கான சாத்தியக்கூறு..!சபையில் வெளியிடப்பட்ட தகவல்.!samugammedia

Sharmi / Jun 8th 2023, 10:51 am
image

Advertisement

எதிர்காலத்தில் இலங்கையில் வட்டி விகிதங்கள் குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பபட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரம் நிலைபெறும் போது, மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், வங்கிகள் மூலம் சாமானிய மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களில் வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதும் நேற்றையதினம் திறைசேரி உண்டியல் ஏலத்தின் போது அதிகபட்ச சதவிகிதம் காணப்பட்டிருந்தாக என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, 91 நாள் கருவூல உண்டியல்களுக்கான வட்டி விகிதம் 2.5 சதவீதமும் குறைந்துள்ளதுடன் 182 நாள் கருவூல உண்டியல்களுக்கான வட்டி விகிதம் கிட்டத்தட்ட 3.4வீதமும் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

வட்டி விகிதங்கள் குறைவடைவதற்கான சாத்தியக்கூறு.சபையில் வெளியிடப்பட்ட தகவல்.samugammedia எதிர்காலத்தில் இலங்கையில் வட்டி விகிதங்கள் குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பபட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அத்துடன் நாட்டின் பொருளாதாரம் நிலைபெறும் போது, மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், வங்கிகள் மூலம் சாமானிய மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த சில மாதங்களில் வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதும் நேற்றையதினம் திறைசேரி உண்டியல் ஏலத்தின் போது அதிகபட்ச சதவிகிதம் காணப்பட்டிருந்தாக என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.இதன்படி, 91 நாள் கருவூல உண்டியல்களுக்கான வட்டி விகிதம் 2.5 சதவீதமும் குறைந்துள்ளதுடன் 182 நாள் கருவூல உண்டியல்களுக்கான வட்டி விகிதம் கிட்டத்தட்ட 3.4வீதமும் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement