• May 19 2024

ஈஸ்டர் குண்டுவெடிப்பு மாத்திரம் அல்ல இனப்படுகொலைக்கும் சர்வதேச விசாரணை...! சிங்கள மக்களே புரிந்து கொள்ளுங்கள்...! சுரேஷ் வேண்டுகோள்...!samugammedia

Sharmi / Sep 9th 2023, 10:27 am
image

Advertisement

ஈஸ்டர் குண்டுவெடிப்பு மாத்திரம் அல்ல இனப்படுகொலைக்கும் சர்வதேச விசாரணை தேவை என்பதனை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றையயதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் 2019ம் ஆண்டு கொழும்பிலும் நீர்கொழும்பிலும், கிழக்கு மாகாணத்திலும் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாகவும் அதே சமயம் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க அவர்கள் கொலை செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் சனல் 4 நிறுவனம் பல்வேறு பட்ட சாட்சியங்களையும் தொகுத்து ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கின்றது.
 
அந்தக் காணொளி இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.  இதற்கு முன்பாக இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்ற போது அந்த இனப்படுகொலை தொடர்பாகவும் அந்த இனப்படுகொலை எவ்வாறு நடைபெற்றது என்பது போலவும் அதில் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பாகவும் இதற்கு முன்பும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

ஆனால், இலங்கை அரசாங்கத்தில் இருக்கக்கூடிய பொதுஜன பெரமுனவைச்சேர்ந்த பலரும் இது தங்களுக்கு எதிராக திட்டமிட்டவை என தெரிவித்துள்ளனர். மேலும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலிலே வெல்வதற்காக போட்ட திட்டம் என்று பிள்ளையான் உட்பட கோத்தாபய ராஜபக்ச உட்பட பலரும் தெரிவித்துள்ளனர். (samugammedia)

ஆனால், இவர்கள் மீதுள்ள சந்தேகங்களுக்கு விடைகொடுக்கக்கூடிய வகையில் பல்வேறு பட்ட சாட்சியங்களுடன் சனல் 4 தொகுத்து வெளியிட்டு இருக்கின்றது.  ஆகவே பிள்ளையான் சிறைச்சாலையில் இருந்து கொண்டு என்னென்ன நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது ஒரு நடவடிக்கை என்றும் அவரை அவ்வாறு மேற்கொள்ள வைத்தது யார்? என்பது தான் முக்கியமான விடயம் என தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் இந்த சனல் 4 தொகுப்பு என்பது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அடுத்த தேர்தலில் வெல்வதற்காக தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்த சிலரை உள்ளடக்கி தனக்கு சாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. (samugammedia)

இந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்பதற்கு முன்பாக மட்டக்களப்பில் இரண்டு பொலிஸ் கொல்லப்பட்டு துப்பாக்கிகள் எடுக்கப்பட்டது. அதற்கு தமிழ் விடுதலை அமைப்பு மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அப்போது இருந்த அரசாங்கம் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை மேலும் சிறைச்சாலையில் இருந்த ஓர் இருவர் பிள்ளையானால் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக நடந்து கொண்டார்கள் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு இருக்கின்றது

ஆரம்பத்தில் இனப்படுகொலை நடைபெற்ற போது அதற்கு ஒரு சர்வதேச விசாரணை  தேவையில்லை  (samugammedia) என்று சொன்ன பலர் இன்று முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பின்பும் இன்று ஒரு சர்வதேச விசாரணை தேவை என்பதை எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாஸ உட்பட அவருடைய கட்சியை சேர்ந்த பலர் சர்வதேச விசாரணை தேவை என தெரிவித்துள்ளனர்.

தற்போது ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றன் பிற்பாடு கார்டினல் ரஞ்சித் போப்பைப் போய் சந்தித்து இது பற்றி பேசியுள்ளார். இலங்கையிலே காரசாரமான அறிக்கைகளை வெளியிட்டு இருக்கின்றார்.  ரணில் விக்ரமசிங்க சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த அவர்,  இன்று ஒரு சர்வதேச விசாரணையை எடுங்கள் என்று கூறும் அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்.

சர்வதேச விசாரணை என்பது வெறுமனே ஈஸ்டர் குண்டுவெடிப்பு மாத்திரம் அல்ல ஒரு இனப்படுகொலை நடந்ததற்கு எதிரான ஒரு சர்வதேச விசாரணையும் தேவை இதனை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சியில் தற்போது இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்க கூட தற்போது தனது அடுத்த ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து விடயங்களை நகர்த்தி வருகின்றாரே தவிர இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது தொடர்பில் கேள்விக்குள்ளான விடையமாக தான் இருக்கின்றது. இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் சர்வதேச விசாரணைகளை கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டால் மாத்திரமே இந்த நாடு ஒரு ஜனநாயகமான நாடாகமாறும் என தெரிவித்துள்ளார்

மேலும், ஒரு சர்வதேச விசாரணையை நடத்தி சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு சஜித்பிரேமதாஸ போன்றோர் ஒரு கூட்டான நடவடிக்கையை எடுத்து இதனை செய்யாவிட்டால் இவர்களுக்கு அடுத்துவரும் தேர்தலில் மக்கள் வாக்களிப்பதில் எந்த பயனும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு மாத்திரம் அல்ல இனப்படுகொலைக்கும் சர்வதேச விசாரணை. சிங்கள மக்களே புரிந்து கொள்ளுங்கள். சுரேஷ் வேண்டுகோள்.samugammedia ஈஸ்டர் குண்டுவெடிப்பு மாத்திரம் அல்ல இனப்படுகொலைக்கும் சர்வதேச விசாரணை தேவை என்பதனை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழில் நேற்றையயதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் 2019ம் ஆண்டு கொழும்பிலும் நீர்கொழும்பிலும், கிழக்கு மாகாணத்திலும் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாகவும் அதே சமயம் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க அவர்கள் கொலை செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் சனல் 4 நிறுவனம் பல்வேறு பட்ட சாட்சியங்களையும் தொகுத்து ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கின்றது.  அந்தக் காணொளி இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.  இதற்கு முன்பாக இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்ற போது அந்த இனப்படுகொலை தொடர்பாகவும் அந்த இனப்படுகொலை எவ்வாறு நடைபெற்றது என்பது போலவும் அதில் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பாகவும் இதற்கு முன்பும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசாங்கத்தில் இருக்கக்கூடிய பொதுஜன பெரமுனவைச்சேர்ந்த பலரும் இது தங்களுக்கு எதிராக திட்டமிட்டவை என தெரிவித்துள்ளனர். மேலும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலிலே வெல்வதற்காக போட்ட திட்டம் என்று பிள்ளையான் உட்பட கோத்தாபய ராஜபக்ச உட்பட பலரும் தெரிவித்துள்ளனர். (samugammedia)ஆனால், இவர்கள் மீதுள்ள சந்தேகங்களுக்கு விடைகொடுக்கக்கூடிய வகையில் பல்வேறு பட்ட சாட்சியங்களுடன் சனல் 4 தொகுத்து வெளியிட்டு இருக்கின்றது.  ஆகவே பிள்ளையான் சிறைச்சாலையில் இருந்து கொண்டு என்னென்ன நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது ஒரு நடவடிக்கை என்றும் அவரை அவ்வாறு மேற்கொள்ள வைத்தது யார் என்பது தான் முக்கியமான விடயம் என தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்த சனல் 4 தொகுப்பு என்பது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அடுத்த தேர்தலில் வெல்வதற்காக தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்த சிலரை உள்ளடக்கி தனக்கு சாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. (samugammedia)இந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்பதற்கு முன்பாக மட்டக்களப்பில் இரண்டு பொலிஸ் கொல்லப்பட்டு துப்பாக்கிகள் எடுக்கப்பட்டது. அதற்கு தமிழ் விடுதலை அமைப்பு மீது குற்றம் சுமத்தப்பட்டது. அப்போது இருந்த அரசாங்கம் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை மேலும் சிறைச்சாலையில் இருந்த ஓர் இருவர் பிள்ளையானால் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக நடந்து கொண்டார்கள் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு இருக்கின்றது ஆரம்பத்தில் இனப்படுகொலை நடைபெற்ற போது அதற்கு ஒரு சர்வதேச விசாரணை  தேவையில்லை  (samugammedia) என்று சொன்ன பலர் இன்று முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பின்பும் இன்று ஒரு சர்வதேச விசாரணை தேவை என்பதை எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாஸ உட்பட அவருடைய கட்சியை சேர்ந்த பலர் சர்வதேச விசாரணை தேவை என தெரிவித்துள்ளனர். தற்போது ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றன் பிற்பாடு கார்டினல் ரஞ்சித் போப்பைப் போய் சந்தித்து இது பற்றி பேசியுள்ளார். இலங்கையிலே காரசாரமான அறிக்கைகளை வெளியிட்டு இருக்கின்றார்.  ரணில் விக்ரமசிங்க சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த அவர்,  இன்று ஒரு சர்வதேச விசாரணையை எடுங்கள் என்று கூறும் அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கின்றார். சர்வதேச விசாரணை என்பது வெறுமனே ஈஸ்டர் குண்டுவெடிப்பு மாத்திரம் அல்ல ஒரு இனப்படுகொலை நடந்ததற்கு எதிரான ஒரு சர்வதேச விசாரணையும் தேவை இதனை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியில் தற்போது இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்க கூட தற்போது தனது அடுத்த ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து விடயங்களை நகர்த்தி வருகின்றாரே தவிர இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது தொடர்பில் கேள்விக்குள்ளான விடையமாக தான் இருக்கின்றது. இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் சர்வதேச விசாரணைகளை கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டால் மாத்திரமே இந்த நாடு ஒரு ஜனநாயகமான நாடாகமாறும் என தெரிவித்துள்ளார் மேலும், ஒரு சர்வதேச விசாரணையை நடத்தி சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு சஜித்பிரேமதாஸ போன்றோர் ஒரு கூட்டான நடவடிக்கையை எடுத்து இதனை செய்யாவிட்டால் இவர்களுக்கு அடுத்துவரும் தேர்தலில் மக்கள் வாக்களிப்பதில் எந்த பயனும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement