• Jun 26 2024

சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நடைபவணி திருமலையில் முன்னெடுப்பு..!samugammedia

Sharmi / Jun 21st 2023, 2:38 pm
image

Advertisement

சர்வதேச யோகா தினத்தையொட்டி Vanni Hope Australia நிறுவனத்தின் நிதி உதவியில் Trinco Aid நிறுவனத்தோடு இணைந்து திருமலை வளாக கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம்  ஏற்பாடு செய்யப்பட்ட யோகா தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி இன்று (21) நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக துணைத் தலைவர் (திருமதி) சந்திரவதனி ஜி.தேவதாசன் தலைமையில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு முன்னால் இன்று காலை 7.45 மணிக்கு ஆரம்பமான இந்த நடைபவனி தபாலக சந்தி வீதி வழியாகச் சென்று திருகோணமலை நகரசபைக்கு முன்னால் முடிவுற்றது. 

இந்த விழிப்புணர்வு நடைபவனியில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், Trinco Aid இன் பணிப்பாளர் திருமதி. தயாளினி ஹரிகரன், கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், சுதேச மருத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சித்த மருத்துவபீட மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நடைபவணி திருமலையில் முன்னெடுப்பு.samugammedia சர்வதேச யோகா தினத்தையொட்டி Vanni Hope Australia நிறுவனத்தின் நிதி உதவியில் Trinco Aid நிறுவனத்தோடு இணைந்து திருமலை வளாக கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம்  ஏற்பாடு செய்யப்பட்ட யோகா தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி இன்று (21) நடைபெற்றது.கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக துணைத் தலைவர் (திருமதி) சந்திரவதனி ஜி.தேவதாசன் தலைமையில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு முன்னால் இன்று காலை 7.45 மணிக்கு ஆரம்பமான இந்த நடைபவனி தபாலக சந்தி வீதி வழியாகச் சென்று திருகோணமலை நகரசபைக்கு முன்னால் முடிவுற்றது. இந்த விழிப்புணர்வு நடைபவனியில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், Trinco Aid இன் பணிப்பாளர் திருமதி. தயாளினி ஹரிகரன், கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், சுதேச மருத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சித்த மருத்துவபீட மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement