• Jun 17 2024

ஆலயங்களில் வாண வேடிக்கை நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும்..! ஆறு.திருமுருகன் வேண்டுகோள்..!samugammedia

Sharmi / Jun 21st 2023, 2:53 pm
image

Advertisement

ஆலயங்களில் வாண வேடிக்கை நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பக்திக்கான முழுமையான இடமாக ஆலயம் மிளிர வேண்டும் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

நேற்றைய தினம்(20) தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற உள சமூக அமைய கூட்டத்தில்  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையகத்தில் சிவபூமி அறநெறிப்பாடசாலை மாணவர்களின் முண்ணுதாரணத்தை யாழ் மாணவர்களும் பின்பற்ற வேண்டும். அதேவேளை மரண நிகழ்வின் போது காசை கரியாக்கி சூழலை மாசுபடுத்தி பாடசாலை மற்றும் வைத்தியசாலை என்றும் பாராது அனைத்து இடங்களிலும் வெடி கொளுத்தும் ஈனச்செயல் எம் மண்ணிலிருந்து ஒழிக்கப்பட வேண்டுகோள் விடுத்தார்.

ஆலயங்களில் வாண வேடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். பக்திக்கான முழுமையான இடமாக ஆலயம் மிளிர வேண்டும் வாராந்தம் வரும் பக்தர்கள் அதிகரிக்க வேண்டும் ஆலயம் அறப்பணி  மையமாக கொண்டு மிளர வேண்டும்.

சிக்கனத்திற்கும் புண்ணியத்திற்கும் பண்பாட்டிற்கும் பெயர்போன தமிழ்ச்சமூகம் தன் பண்டைப் பெருமையை மீட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் குடும்பதோடு வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களிலும் ஞாயிறு காலை அறநெறிக்கும் ஞாயிறு மாலை உறவுகள் வீட்டுக்கு சென்று கூடி குதூகலிக்க மூத்தோரின்  இனிய வழிகாட்டல்களைப் பெற  குழந்தைகளிற்கு  வழி ஏற்படுத்தப்பட வேண்டும்  அதற்கு பெற்றோர் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றார்.


ஆலயங்களில் வாண வேடிக்கை நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும். ஆறு.திருமுருகன் வேண்டுகோள்.samugammedia ஆலயங்களில் வாண வேடிக்கை நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பக்திக்கான முழுமையான இடமாக ஆலயம் மிளிர வேண்டும் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.நேற்றைய தினம்(20) தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற உள சமூக அமைய கூட்டத்தில்  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மலையகத்தில் சிவபூமி அறநெறிப்பாடசாலை மாணவர்களின் முண்ணுதாரணத்தை யாழ் மாணவர்களும் பின்பற்ற வேண்டும். அதேவேளை மரண நிகழ்வின் போது காசை கரியாக்கி சூழலை மாசுபடுத்தி பாடசாலை மற்றும் வைத்தியசாலை என்றும் பாராது அனைத்து இடங்களிலும் வெடி கொளுத்தும் ஈனச்செயல் எம் மண்ணிலிருந்து ஒழிக்கப்பட வேண்டுகோள் விடுத்தார்.ஆலயங்களில் வாண வேடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். பக்திக்கான முழுமையான இடமாக ஆலயம் மிளிர வேண்டும் வாராந்தம் வரும் பக்தர்கள் அதிகரிக்க வேண்டும் ஆலயம் அறப்பணி  மையமாக கொண்டு மிளர வேண்டும்.சிக்கனத்திற்கும் புண்ணியத்திற்கும் பண்பாட்டிற்கும் பெயர்போன தமிழ்ச்சமூகம் தன் பண்டைப் பெருமையை மீட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.அத்துடன் குடும்பதோடு வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களிலும் ஞாயிறு காலை அறநெறிக்கும் ஞாயிறு மாலை உறவுகள் வீட்டுக்கு சென்று கூடி குதூகலிக்க மூத்தோரின்  இனிய வழிகாட்டல்களைப் பெற  குழந்தைகளிற்கு  வழி ஏற்படுத்தப்பட வேண்டும்  அதற்கு பெற்றோர் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement