மின்சாரதில் இயங்கும் வாகனங்கள் உட்பத்தி

71

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யு (BMW) நிறுவனம் இலக்ரிக் கார் மற்றும் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் வகையில் ஜேர்மனில் உள்ள தனது நிறுவனத்தை மீளமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது .

அத்துடன் எரிப்பு (Combustion) எஞ்சின் உற்பத்திகளை ஒஸ்திரியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குக்கு மாற்றவுள்ளதாக (BMW) நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறைந்தளவான புகை வெளியேற்றத்தைக்கொண்ட கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு மாறுவதற்கான ஏற்பாட்டின் ஒரு பகுதியாக இது கருதப்படுகின்றது.

அடுத்த தலைமுறையின் தேர்வாகவுள்ள மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான முதலீடுகளில் உலகளாவிய தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளன.

இலக்ரிக் கார்களை நுகர்வாளர்கள் அதிகம் விரும்புவதாலும் அதிக புகை வெளியேறும் எஞ்சின்களைக் கொண்ட வாகனங்களின் உற்பத்தியை அரசாங்கங்கள் குறைத்துவருவதாலும் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறைந்தளவான புகையை வெளியேற்றும் கார்களின் உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்துக்கு ஜேர்மன் 3 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளதுடன் பிரித்தானியா 2030 ம் ஆண்டு தொடக்கம் பெற்றோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களைவ விற்பனை செய்ய தடை விதிக்கவுள்ளது.

2022 ம் ஆண்டளவில் முற்றும் முழுதாக மின்சாரத்தில் இயங்கக்கூடிய கார்களை உற்பத்தி நிலைக்கு தொழிற்சாலைகள் மாற்றமடைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மனில் உள்ள எரிப்பு எஞ்சின் உற்பத்திகள் யாவும் மின்சாரத்தினூடான கார்களை உருவாக்கும் பணிகளுக்காக மாற்றீடு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.