• May 10 2024

பகுத்தறிவு அற்றவர் கோட்டா...! அவருக்கு வாளி வைத்ததற்கு வருத்தப்படுகிறேன்- என்கிறார் ஜானக ரத்நாயக்க!samugammedia

Sharmi / Apr 22nd 2023, 9:47 am
image

Advertisement

பகுத்தறிவு அற்ற, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஆதரவளித்தமைக்காக தற்போது வருந்துவதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முட்டாள் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளாத அடிப்படை விடயங்கள் உள்ளதாகவும், அவர்களிற்கு பொருளாதாரமும் தெரியாது கணக்கியலும் தெரியாது அவர்களிற்கு அரசியல் மாத்திரம்தான் தெரியும் என்றும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது உருவாகிவரும் சூழ்நிலை அரசியலில் ஈடுபடுவது குறித்து, தான் சிந்திக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்த்தமைக்காக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகவேண்டும் அவரை பதவி நீக்கவேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துவருகின்றார்.

எனினும் தான் பதவிவிலகப்போவதில்லை என ஜானகரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தன்னை பதவி நீக்கவேண்டும் என்ற யோசனைக்கு நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண அதிகரிப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கையில் மின்சாரத்திற்கான தேவை வீழ்ச்சியடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இது ஏற்கனவே நஸ்டத்தில் இயங்கும் இலங்கை மின்சாரசபைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

கட்டண அதிகரிப்பின் மூலம் தனது நஸ்டத்தை சரிசெய்வதற்கு முயலும் இலங்கை மின்சாரசபையின் முயற்சிகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவு அற்றவர் கோட்டா. அவருக்கு வாளி வைத்ததற்கு வருத்தப்படுகிறேன்- என்கிறார் ஜானக ரத்நாயக்கsamugammedia பகுத்தறிவு அற்ற, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஆதரவளித்தமைக்காக தற்போது வருந்துவதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.முட்டாள் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளாத அடிப்படை விடயங்கள் உள்ளதாகவும், அவர்களிற்கு பொருளாதாரமும் தெரியாது கணக்கியலும் தெரியாது அவர்களிற்கு அரசியல் மாத்திரம்தான் தெரியும் என்றும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் தற்போது உருவாகிவரும் சூழ்நிலை அரசியலில் ஈடுபடுவது குறித்து, தான் சிந்திக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்த்தமைக்காக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகவேண்டும் அவரை பதவி நீக்கவேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துவருகின்றார்.எனினும் தான் பதவிவிலகப்போவதில்லை என ஜானகரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தன்னை பதவி நீக்கவேண்டும் என்ற யோசனைக்கு நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மின்கட்டண அதிகரிப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கையில் மின்சாரத்திற்கான தேவை வீழ்ச்சியடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இது ஏற்கனவே நஸ்டத்தில் இயங்கும் இலங்கை மின்சாரசபைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.கட்டண அதிகரிப்பின் மூலம் தனது நஸ்டத்தை சரிசெய்வதற்கு முயலும் இலங்கை மின்சாரசபையின் முயற்சிகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement