• Nov 28 2024

Sharmi / Sep 24th 2024, 10:17 am
image

இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமாரதிஸாநாயக்க நேற்றையதினம்(23)  பதவியேற்றுள்ள நிலையில் நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக பிரதமர் பதவியிலிருந்து தினேஷ் குணவர்தன நேற்றையதினம் காலை பதவி விலகியிருந்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட நால்வர் அடங்கிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வட்டாங்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஜனாதிபதி அநுரகுமார சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகளையும், பிரதமர் வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுகளையும் வைத்திருப்பார்கள் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

கொழும்பு தேர்தல் தொகுதியில் அநுரகுமார திசாநாயக்கவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்‌ஷ்மன் நிபுண ஆராச்சி, பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக் குழு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று இரவு நாடாளுமன்ற கலைக்கப்பட்ட பின்னர், டிசம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அதன் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படுகிறது இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமாரதிஸாநாயக்க நேற்றையதினம்(23)  பதவியேற்றுள்ள நிலையில் நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.குறிப்பாக பிரதமர் பதவியிலிருந்து தினேஷ் குணவர்தன நேற்றையதினம் காலை பதவி விலகியிருந்தார்.இதனையடுத்து, ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட நால்வர் அடங்கிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வட்டாங்கள் தெரிவித்துள்ளனர்.இதன்படி, ஜனாதிபதி அநுரகுமார சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகளையும், பிரதமர் வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுகளையும் வைத்திருப்பார்கள் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.கொழும்பு தேர்தல் தொகுதியில் அநுரகுமார திசாநாயக்கவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்‌ஷ்மன் நிபுண ஆராச்சி, பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக் குழு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளது.இதன்படி, இன்று இரவு நாடாளுமன்ற கலைக்கப்பட்ட பின்னர், டிசம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அதன் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement