• May 19 2024

பிரபாகரன் உள்ளாரா?? பழ. நெடுமாறனின் கருத்தால் மீண்டும் இனவாதம் தோன்றலாம்! – சுரேஷ் SamugamMedia

Chithra / Feb 15th 2023, 10:35 am
image

Advertisement

பழ.நெடுமாறன் 14 வருடங்கள் கழிந்த பின்னரும் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக குறிப்பிடுகின்றார் என்றால் அதனை மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டுமே தவிர இதனை இரகசியமாக வைத்திருக்கவேண்டிய தேவை இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது எமுப்பபட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

பழ.நெடுமாறன் நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பினை பேணிவந்திருந்தாகவும் அவர்கள் மீதான அன்பின் மிகுதியால் இவ்வாறு குறிப்பிட்டாரா என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

எனினும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் தெளிவாக கூறியுள்ளதாக குறிப்பிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த விடயம் சிங்கள இனவாதிகளாக மீண்டுமொரு குழப்பத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற விடயங்கள் ஈழ தமிழர்களுக்கு பாரிய பிரச்சனையாகவே அமையும் என்றும் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பதற்கான பின்னணியாக கூட இருக்கலாம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இல்லாத அடக்குமுறைகளை இலங்கை அரசாங்கம் உருவாக்குவதற்கான முயற்சியாக கூட இது அமையலாம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எதிர்வுகூறியுள்ளார்.

இதேவேளை விடுதலை புலிகளுடன் நீண்டகால தொடர்பினை கொண்ட பழ. நெடுமாறனின் தெரிவித்த கருத்தால் மீண்டும் இனவாதம் தோன்றலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது கருத்து உண்மையாக இருந்தாலும் அதன் உறுதிப்பாட்டை இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

13 ஆம் அரசியலமைப்பு திருத்தம் பாகுபாடின்றி முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு, இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பில் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் உள்ளாரா பழ. நெடுமாறனின் கருத்தால் மீண்டும் இனவாதம் தோன்றலாம் – சுரேஷ் SamugamMedia பழ.நெடுமாறன் 14 வருடங்கள் கழிந்த பின்னரும் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக குறிப்பிடுகின்றார் என்றால் அதனை மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டுமே தவிர இதனை இரகசியமாக வைத்திருக்கவேண்டிய தேவை இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நேற்று யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது எமுப்பபட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.பழ.நெடுமாறன் நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பினை பேணிவந்திருந்தாகவும் அவர்கள் மீதான அன்பின் மிகுதியால் இவ்வாறு குறிப்பிட்டாரா என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.எனினும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் தெளிவாக கூறியுள்ளதாக குறிப்பிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த விடயம் சிங்கள இனவாதிகளாக மீண்டுமொரு குழப்பத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.இவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற விடயங்கள் ஈழ தமிழர்களுக்கு பாரிய பிரச்சனையாகவே அமையும் என்றும் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பதற்கான பின்னணியாக கூட இருக்கலாம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.இல்லாத அடக்குமுறைகளை இலங்கை அரசாங்கம் உருவாக்குவதற்கான முயற்சியாக கூட இது அமையலாம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எதிர்வுகூறியுள்ளார்.இதேவேளை விடுதலை புலிகளுடன் நீண்டகால தொடர்பினை கொண்ட பழ. நெடுமாறனின் தெரிவித்த கருத்தால் மீண்டும் இனவாதம் தோன்றலாம் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் அவரது கருத்து உண்மையாக இருந்தாலும் அதன் உறுதிப்பாட்டை இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.13 ஆம் அரசியலமைப்பு திருத்தம் பாகுபாடின்றி முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் கூறியுள்ளார்.இந்த பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு, இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பில் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement