• May 07 2024

எரிபொருளை பெறுவதற்கு கூட ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்! - வெளியான தகவல் SamugamMedia

Chithra / Feb 15th 2023, 10:45 am
image

Advertisement


எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெற வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் முப்பது வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருட்களின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதாலும், எரிபொருளைக் கொள்வனவு செய்வதை விட ஏனைய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எரிபொருள் கையிருப்பு போதுமான அளவு உள்ள போதிலும், முன்பு ஒரு நாளில் பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பு தீர்ந்து போனதாகவும், ஆனால் தற்போது அந்த இருப்புக்கள் இரண்டு நாட்கள் வரை இருப்பதாகவும் பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்

மேலும், QR முறைப்படி, ஒரு வாரத்திற்கு தேவையான அளவு எரிபொருளை பெறுவதற்கு கூட நுகர்வோர் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்

எரிபொருளை பெறுவதற்கு கூட ஆர்வம் காட்டாத இலங்கையர்கள் - வெளியான தகவல் SamugamMedia எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெற வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் முப்பது வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.எரிபொருட்களின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதாலும், எரிபொருளைக் கொள்வனவு செய்வதை விட ஏனைய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எரிபொருள் கையிருப்பு போதுமான அளவு உள்ள போதிலும், முன்பு ஒரு நாளில் பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பு தீர்ந்து போனதாகவும், ஆனால் தற்போது அந்த இருப்புக்கள் இரண்டு நாட்கள் வரை இருப்பதாகவும் பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்மேலும், QR முறைப்படி, ஒரு வாரத்திற்கு தேவையான அளவு எரிபொருளை பெறுவதற்கு கூட நுகர்வோர் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்

Advertisement

Advertisement

Advertisement