• Apr 30 2024

மீண்டும் எரிபொருள் வரிசையை ஏற்படுத்த அரசு சதியா?

Chithra / Feb 2nd 2023, 9:39 am
image

Advertisement

பெற்றோல் விலையைத் திடீரென அதிகரித்ததன் உள்நோக்கம் என்ன என்று எதிரணிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மீண்டும் எரிபொருள் வரிசையை ஏற்படுத்த அரசு முயற்சிக்கின்றதா என்றும் எதிரணிகள் வினாத் தொடுத்துள்ளன.

இதனூடாகத் தேர்தலை ஒத்திவைக்க அரசு சதி செய்கின்றதா என்றும் எதிரணிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

இதன்படி, லங்காபெற்றோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாவிலிருந்து 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய விலை 400 ரூபாவாகும்.

எனினும், ஏனைய ரக பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

இதனிடையே, சிபெட்கோ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்துக்கு அமைவாக பெற்றோல் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீண்டும் எரிபொருள் வரிசையை ஏற்படுத்த அரசு சதியா பெற்றோல் விலையைத் திடீரென அதிகரித்ததன் உள்நோக்கம் என்ன என்று எதிரணிகள் கேள்வி எழுப்பியுள்ளன.மீண்டும் எரிபொருள் வரிசையை ஏற்படுத்த அரசு முயற்சிக்கின்றதா என்றும் எதிரணிகள் வினாத் தொடுத்துள்ளன.இதனூடாகத் தேர்தலை ஒத்திவைக்க அரசு சதி செய்கின்றதா என்றும் எதிரணிகள் கேள்வி எழுப்பியுள்ளன.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன்படி, லங்காபெற்றோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாவிலிருந்து 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய விலை 400 ரூபாவாகும்.எனினும், ஏனைய ரக பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.இதனிடையே, சிபெட்கோ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்துக்கு அமைவாக பெற்றோல் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement