• May 19 2024

அரிசிக்கு தட்டுப்பாடா..? விவசாய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / Oct 17th 2023, 8:44 am
image

Advertisement

 

அரிசி இருப்புக்களை மறைத்து அரிசி தட்டுப்பாடு இருப்பதாக வியாபாரிகளும் விவசாயிகளும் காட்டிக் கொள்ள முயற்சிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புத்தளம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

எத்தனை அரிசி கையிருப்புகளை மறைத்து வைத்தாலும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம்.

அரிசி தட்டுப்பாடு இல்லை, ஆனால், நெல் இருக்கிறது என்பதுதான், பொதுவாக, இந்த பருவ காலத்தில் விளைச்சல் விளைந்திருப்பது வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தெரியும்.

இதை, ஐந்து மாதங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால், விவசாயிகள் வீடுகளில் வைத்துள்ளனர். மேலும் மில் உரிமையாளர்கள் இவற்றை ஆலைகளில் வைத்துள்ளனர்.

அதனால்தான் இந்த சிறு பற்றாக்குறை உருவாகிறது. ஆனால் நாட்டுக்குத் தேவையான அரிசியின் அளவு.. அதாவது நம் அனைவருக்கும் சாப்பிட சோறு இருக்கிறது. பாஸ்மதியை நாட்டிலிருந்து கொண்டு வர வேண்டும். கிரி சம்பாவுக்கு ஓரளவு தட்டுப்பாடு உள்ளது.

மேலும், எவ்வளவு தான் அரிசியினை மறைத்து வைத்தாலும் சாதாரண நிலை அரிசி கட்டுப்பாட்டு விலையை தாண்டி செல்ல அனுமதிக்க மாட்டோம். இது கட்டுப்பாட்டு விலைக்கு கீழே பராமரிக்கப்படுகிறது. என தெரிவித்தார்.


அரிசிக்கு தட்டுப்பாடா. விவசாய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia  அரிசி இருப்புக்களை மறைத்து அரிசி தட்டுப்பாடு இருப்பதாக வியாபாரிகளும் விவசாயிகளும் காட்டிக் கொள்ள முயற்சிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.புத்தளம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எத்தனை அரிசி கையிருப்புகளை மறைத்து வைத்தாலும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம்.அரிசி தட்டுப்பாடு இல்லை, ஆனால், நெல் இருக்கிறது என்பதுதான், பொதுவாக, இந்த பருவ காலத்தில் விளைச்சல் விளைந்திருப்பது வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தெரியும்.இதை, ஐந்து மாதங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால், விவசாயிகள் வீடுகளில் வைத்துள்ளனர். மேலும் மில் உரிமையாளர்கள் இவற்றை ஆலைகளில் வைத்துள்ளனர்.அதனால்தான் இந்த சிறு பற்றாக்குறை உருவாகிறது. ஆனால் நாட்டுக்குத் தேவையான அரிசியின் அளவு. அதாவது நம் அனைவருக்கும் சாப்பிட சோறு இருக்கிறது. பாஸ்மதியை நாட்டிலிருந்து கொண்டு வர வேண்டும். கிரி சம்பாவுக்கு ஓரளவு தட்டுப்பாடு உள்ளது.மேலும், எவ்வளவு தான் அரிசியினை மறைத்து வைத்தாலும் சாதாரண நிலை அரிசி கட்டுப்பாட்டு விலையை தாண்டி செல்ல அனுமதிக்க மாட்டோம். இது கட்டுப்பாட்டு விலைக்கு கீழே பராமரிக்கப்படுகிறது. என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement