• May 19 2024

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதா..?? மொட்டு - ரணில் பிளவால் ஏற்படபோகும் விளைவு எச்சரித்த சுரேஸ்.! samugammedia

Chithra / Jun 17th 2023, 3:55 pm
image

Advertisement


நாட்டில், ஆட்சியிலுள்ள தற்போதைய அரசாங்கத்தின் மீது சிங்கள மற்றும் தமிழ் மக்கள் பாரிய வெறுப்பு மற்றும் கோபத்துடனே  காணப்படுவதாக ஈழ மக்கள் புரட்சிகர முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பாரிய கருத்து மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இவ்வாறு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும்போது, உதவி வழங்குகின்ற நாடுகள் மற்றும் சர்வதேச நாணயநிதியம் என்பன இலங்கைக்கு உதவிகளை வழங்குவதில் பின்நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றின் அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார பின்னடைவில் இருந்து மீள்வதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தற்போது பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்று அதன் மூலம் நிதிகளை பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் ஆனால் தனியாரின் கைகளுக்கு பொது நிறுவனங்கள் செல்லும் போது நாட்டு மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதா. மொட்டு - ரணில் பிளவால் ஏற்படபோகும் விளைவு எச்சரித்த சுரேஸ். samugammedia நாட்டில், ஆட்சியிலுள்ள தற்போதைய அரசாங்கத்தின் மீது சிங்கள மற்றும் தமிழ் மக்கள் பாரிய வெறுப்பு மற்றும் கோபத்துடனே  காணப்படுவதாக ஈழ மக்கள் புரட்சிகர முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பாரிய கருத்து மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையில் இவ்வாறு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும்போது, உதவி வழங்குகின்ற நாடுகள் மற்றும் சர்வதேச நாணயநிதியம் என்பன இலங்கைக்கு உதவிகளை வழங்குவதில் பின்நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.எனவே நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றின் அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார பின்னடைவில் இருந்து மீள்வதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் தற்போது பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்று அதன் மூலம் நிதிகளை பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் ஆனால் தனியாரின் கைகளுக்கு பொது நிறுவனங்கள் செல்லும் போது நாட்டு மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement